லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  லியோ படத்திற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. முதலில் தமிழகத்தில் ஐந்து சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு அதற்கான அரசாணையை பிறப்பித்தது. இதனால் சில திரையரங்குகள் 4 மணி காட்சிகளை திரையிட வேலைகளை தொடங்கினர். ஆனால் உடனடியாக இன்னொரு அரசாணை வெளியானது அதில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் ஒன்பது மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகளுக்கு மேல் திரையிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் லியோ பட குழுவினரை அதிர்ச்சி அடைய செய்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அம்மா பொண்ணா இவங்க? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!


இந்நிலையில் லியோ தயாரிப்பு நிறுவனம் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றத்தை நாடி இருந்தது, ஆனால் நீதிமன்றம் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கேட்டு தமிழக அரசை முறையிடலாம் என்றும் கூறி இருந்தது.  இந்த பிரச்சனை காரணமாக சென்னையில் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் இதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் தமிழகத்தில் மட்டும் லியோ படம் காலை 9 மணிக்கு வெளியாகிறது.  கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.


இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்துள்ளார். அதில் லியோ ஒரு சிறந்த படம் வேண்டும் என்று கூறி, லோகேஷ் கனகராஜ், அன்பறிவு, அனிருத், விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் LCU என்ற ஹாஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.  லியோ படம் தொடங்கியதில் இருந்து இது LCUல் வருமா வராதா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் இதற்கான விடையை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனாலும் இதனை கடந்த ஒரு வருடமாக ரகசியமாக வைத்திருந்த படக்குழுவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.  இருப்பினும் படக்குழுவிடம் கேட்காமல் இதனை பதிவு செய்திருக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.  



தமிழகம் முழுவதும் லியோ படத்திற்கு முன்பதிவு அதிகளவில் உள்ளது.  அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கும் டிக்கெட் கிடைக்காத நிலைமை உருவாகி உள்ளது.  மேலும், வெளிநாடுகளில் லியோ படம் சரித்திர சாதனை படைத்துள்ளது.  இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவில் அதிக டிக்கெட்கள் முன்பதிவு ஆகி உள்ளது.  இதன் மூலம் முதல் நாள் வசூலில் லியோ படம் முதல் இடம் பிடித்துள்ளது.  லியோ படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் என பலர் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடன் பவா செல்லதுரை போட்ட முதல் போஸ்ட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ