Veera Promo: இது எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே.. இனிமே வீரா ஆட்டம் ஆரம்பம்
Veera TV Serial Watch Today Episode: இன்றைய வீரா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Veera TV Serial In Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா, இந்த சீரியல் தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
மாறன் வீரா கழுத்தில் தாலி கட்ட அதை ஏற்று கொள்ளாத வீரா தனது வீட்டில் இருக்க நீ இல்லாமல் நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று வெளியில் காத்துக் கிடக்கிறான். வள்ளியும் அவளது பங்கிற்கு வெளியே நின்று போராட்டம் நடத்திய நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் கண்மணியும் வடிவும் வீராவுக்கும் மாறனுக்கும் விவாகரத்து வாங்கி கொடுக்க வேண்டும். இந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பழி தீர்க்க வேண்டும் என்று பிளான் போட வள்ளி இதை கேட்டு அதிர்ச்சியடைந்ததோடு வீடியோவும் எடுத்து கொண்டாள்.
இதை தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் வள்ளி அந்த வீடியோவை வீராவிடம் காட்ட அதை பார்த்து அதிர்ச்சி அடையும் வீரா ராமசந்திரன் குடும்பத்தை காப்பாற்றவும் கண்மணியை திருத்தவும் முடிவெடுத்து வள்ளி மற்றும் மாறனுடன் மாலையும் கழுத்துமாக ராமசந்திரன் கிளம்பி வருகிறாள்.
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கவே இல்லையே, இனிமே வீரா ஆட்டம் ஆரம்பம், கண்மணிக்கு தரமான சம்பவங்கள் காத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலை சனிக்கிழமை வரை போட்டா இன்னும் சூப்பரா இருக்கும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க - நினைத்தேன் வந்தாய் சீரியல்: கொளுத்தி போட்ட மனோகரி.. வீட்டை விட்டு கிளம்பும் சுடர்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ