நினைத்தேன் வந்தாய் சீரியல்: கொளுத்தி போட்ட மனோகரி.. வீட்டை விட்டு கிளம்பும் சுடர்..

Ninaithen Vandhai TV Serial Watch Today Episode: இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2024, 12:40 PM IST
நினைத்தேன் வந்தாய் சீரியல்: கொளுத்தி போட்ட மனோகரி.. வீட்டை விட்டு கிளம்பும் சுடர்.. title=

Ninaithen Vandhai TV Serial Today (12.08.2024) Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சுடரை அஞ்சலி கைபிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றதை தொடர்ந்து இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அஞ்சலி சுடரை உள்ளே அழைத்துச் சென்ற பிறகு இந்த கல்யாணம் நடந்ததில் யாருக்கு சந்தோஷமும் இல்லையோ எனக்கு சந்தோஷம் என்று சொல்லி கட்டிப்பிடித்துக் கொள்ள சுடரும் சந்தோஷப்படுகிறாள்.

அதைத்தொடர்ந்து சுடர் மற்ற மூன்று குழந்தைகளிடம் அன்பாக பேச பார்க்க அவர்கள் முகத்தை திருப்பிக் கொள்ள சுடர் வருத்தமடைகிறாள். பிறகு குழந்தைகளில் எல்லோரும் சாப்பிட உட்கார சுடர் சமையல் எனத் தெரிந்ததும் அபி, கவின், காவியா சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகின்றனர். 

இதனால் சுடர் குழந்தைகள் நான் சமைத்ததை கூட சாப்பிட மாட்டாங்க என வருத்தப்பட இந்து எல்லாம் போக போக சரியாகும் என்று ஆறுதல் சொல்கிறாள். ஆனாலும் சுடர் மன வருத்தம் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறாள். 

யாருக்கும் தெரியாமல் பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது மனோகரி பார்த்து விடுகிறாள். பாத்தீங்களா எழிலையும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ எல்லாரையும் ஏமாத்திட்டு இந்த வீட்டை விட்டு போக பார்க்கிறாள் என்று ஏற்றி விட சுடர் எனக்கு இந்த கல்யாணம் எப்படி நடந்துச்சு சத்தியமா தெரியல. நான் இங்கே இருக்கிறது சரியா தப்பா என்று கூட தெரியல என்று கண் கலங்குகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க - நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுதானா? வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News