மலையாளத் திரையுலகம் பல வெற்றிகரமான படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதில பல படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.  அக்டோபர் 2023ல் சில மலையாள திரைப்படங்கள் SonyLIV, Jio Cinema, Amazon Prime video மற்றும் பிற OTT தளங்களில் வெளியாக உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண்ணூர் ஸ்குவாட் - (Kannur Squad) SonyLIV


மம்முட்டி, கிஷோர் குமார் ஜி மற்றும் விஜயராகவன் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ளார். ஜார்ஜ் மார்ட்டின் என்ற போலீஸ்காரர் மற்றும் அவரது குழுவினர், ஒரு கொடூரமான கிரிமினல் கும்பலைப் பிடிக்க நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார்கள். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது மற்றும் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது.


மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் அதிகம் படித்த நாயகி யார்..? அட, இவரா..!


தூமம் - (Dhoomam) Amazon Prime Video  


தூமம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஃபஹத் ஃபாசில் அவினாஷ் பாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் ஒரு குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அவரது கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதால், சில முடிவுகள் அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


மதுர மனோஹர மோகம் (Madhura Manohara Moham)


இந்த படம் பொய்களின் அடிப்படையில் உறவை உருவாக்கும் மனு மற்றும் மீராவின் குடும்பங்களைச் சுற்றி நடக்கிறது. பல தொடர்ச்சியான நகைச்சுவையான திருப்பங்கள் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இப்படத்தில் ஷராபுதீன், ரஜிஷா விஜயன், ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


மதனோல்சவம் (Madanolsavam)


சுராஜ் வெஞ்சாரமூடு, பாபு ஆண்டனி, மற்றும் ராஜேஷ் மாதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், பல ஏற்ற தாழ்வுகளுக்கு மத்தியிலும் தனது விதியை தானே வடிவமைக்கும் ஒரு மனிதனைச் சுற்றி வருகிறது. இந்த கதை, தனது வாழ்க்கையில் சிறந்ததை அடைவதில் கவனம் செலுத்தும் நபரின் முன்னணி உணர்வைக் காட்டுகிறது. ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


காதல்-தி கோர் - (Kaathal-The Core) Jio Cinema  


மம்முட்டி மற்றும் ஜோதிகாவின் நடிப்பில் உருவாகி உள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘காதல்: தி கோர்’ இன்னும் இந்த படம் வெளியாகாத நிலையில், இந்த படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. இருவரும் படத்தில் திருமணமான ஜோடியாக நடிக்கவுள்ளனர்.


ஊடல் (Udal)


இந்த படத்தில் இந்திரன்ஸ், தியான் ஸ்ரீனிவாசன் மற்றும் துர்கா கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஷைனி, ஒரு இல்லத்தரசி மற்றும் தாயாரைச் சுற்றி வருகிறது. துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுடன் படம் ஒரு பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் ஸ்ட்ரீமிங் தளம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


சேஷம் மைக்-இல் பாத்திமா (Sesham Mike-il Fathima)


பெண்களை மையமாகக் கொண்ட இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் ஷாஹீன் சித்திக் படம் முழுவதும் அவருக்கு உதவியாக இருக்கிறார். இப்படம் கால்பந்து வீராங்கனையாக இருக்கும் ஒரு இளம் பெண்ணைச் சுற்றி வருகிறது, இருப்பினும் இது முழுக்க முழுக்க விளையாட்டு கதை அல்ல. இந்த படத்திற்கும் ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


மேலும் படிக்க | தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ