தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான லியோ இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்பட்ட இப்படம், அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் அதிரடி ட்ரைலர் திரையுலகினர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021ம் ஆண்டு வெளியான மாஸ்டருக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி உள்ளது. லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. டிரெய்லர் வெளியீட்டிற்குப் பிறகு தயாரிப்பாளர் லலித் குமார் லியோ படம் குறித்து ரசிகர்களுடன் பேசியுள்ளார். பல முக்கிய அறிவிப்புகளை இதில் பகிர்ந்து கொண்டார் லலித்.
மேலும் படிக்க | கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்..லிஸ்டில் யார் டாப் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் ஹிந்தி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் , அதாவது பிவிஆர், ஐனாக்ஸ் மற்றும் சினிபோலிஸ் திரையரங்குகளில் இந்தியில் வெளியிடப்படாது என்று கூறி உள்ளார். ஏனெனில் இந்த மூன்று நிறுவனங்களும் படம் வெளியான எட்டு வாரங்களுக்குப் பிறகு OTTல் திரையிடப்பட வேண்டும் என்று நிபந்தனைகள் வைக்கின்றனர். ஆனால் லியோ படம் நான்கு வாரங்களுக்குப் பிறகு OTTல் வெளியிடப்படும். ஆனாலும் வட இந்தியாவில் அதன் ஹிந்தி டப்பிங் பதிப்பில் 2000க்கும் மேற்பட்ட சிங்கிள் ஸ்கிரீன்களில் லியோ வெளியிடப்படும். இப்படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் ரூ.120 கோடி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்களை அடுத்து லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) இல் லியோ ஒரு பகுதியாக இருக்கிறாரா என்று லலித்திடம் கேட்டபோது, அதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் அக்டோபர் 19 வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார். படக்குழு இதனை வேண்டுமென்றே அதை ரகசியமாக வைத்துள்ளனர். விஜய்யின் 67வது படமான லியோவில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், அனுராக் காஷ்யப் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அனிருத் ரவிச்சந்தர் இசை மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார்.
லியோ படத்தின் முதல் நாள் டிக்கெட்களுக்கு அதிக டிமாண்ட் உள்ள நிலையில், படத்தை ஒருநாள் முன்னதாக அதாவது அக்டோபர் 18ம் தேதி குறிப்பிட்ட சில திரையரங்கில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் முந்தைய படமான வாரிசு படத்திற்கும் இதே போல காட்சிகளை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இது படத்திற்கு கூடுதல் விளம்பரத்தை கொடுத்த நிலையில், லியோ படத்திற்கு இருக்கும் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லியோ படத்தின் டிரைலரில் விஜய் பெண்களை ஆபசமாக குறிப்பிடும் ஒரு கெட்ட வார்த்தையை பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்து. இதை எதிர்த்து சிலர் விஜய்க்கும், லியோ படக்குழுவிற்கும் கண்டனம் தெரிவித்தனர். லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட நேர்காணலில் அவரிடம் லியோ பட டிரைலரில் இடம் பெற்றிருந்த கெட்ட வார்த்தை குறித்து கேட்கப்பட்டது, விஜய் சில காட்சிகள் ஒத்துவருமா என தன்னிடம் கேட்டதாகவும் தான்தான் அதில் நடிக்க சொல்லி கூறியதாகவும் குறிப்பிட்டார். இதனால் அவர் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான்தான் பொறுப்பு என்றும் கூறினார்.
மேலும் படிக்க | வசூலில் முன்னேறும் திருச்சிற்றம்பலம் - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ