தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?

Lokesh Kanagaraj Salary for Thalaivar 171: தமிழ் திரையுலக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். அவர் இப்படத்தை இயக்க வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

1 /8

தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், லோகேஷ் கனகராஜ். 

2 /8

இவர், நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். லியோ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

3 /8

லோகேஷ் கனகராஜ் சில படங்களையே இயக்கி இருந்தாலும் தான் இயக்கிய அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்துள்ளார். 

4 /8

லோகேஷ் இயக்கியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. 

5 /8

லோகேஷ், ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

6 /8

தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

7 /8

லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க பெரிய தொகை ஒன்றை சம்பளமாக வாங்கியுள்ளாராம். 

8 /8

மாநகரம், கைதி போன்ற படங்களுக்கு லட்சங்களில் சம்பளம் வாங்கிய லோக்கேஷ் கனகராஜ், மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்குவதற்காக 20 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. லியோ படத்தை இயக்க இவர் 35 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் ‘தலைவர் 171’ படத்திற்காக 60 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.