Uyir Thamizhukku Movie Review Tamil : இயக்குநரும் நடிகருமான அமீர், தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் படம் உயிர் தமிழுக்கு. இந்த படத்தில் அவருடன் சேர்ந்து மறைந்த நடிகர் மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், அரசியல்-காமெடி படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு அனைவரும் மாறி மாறி பெரிய வகையில் ப்ரமோஷன் செய்ததை தொடர்ந்து, இதன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. படம் எப்படியிருக்கு? இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கதையின் கரு:


கேபிள் டிவி தொழில் செய்து வரும் பாண்டியனுக்கு, அரசியல் வாரிசான தமிழ் செல்வி மீது காதல். அவரை பார்ப்பதற்காகவே தேர்தலில் நிற்கிறார். அவருடன் காதல் வயம் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மக்கள் செல்வாக்கையும் பெறுகிறார். தமிழ் செல்வியும் ஒரு கட்டத்தில் இவரை காதலிக்க, இது அவருடைய அப்பாவிற்கு பிடிக்காமல் பாேகிறது. அவரை யாரோ கொலை செய்ய, அந்த கொலைப்பழி பாண்டியன் மீது விழுகிறது. இதனால் தமிழ் செல்வியும் அவரை வெறுக்க ஆரம்பிக்கிறார். தன் காதலிக்கு தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்காகவும் தனது காதலை நிரூபிப்தற்காகவும் மீண்டும் தேர்தலில் நிற்கிறார். அந்த கொலையை செய்தது யார்? பாண்டியன் தேர்தலில் வெற்றி பெற்றாரா? இதற்கு பதிலாக வருகிறது படத்தின் கதை. 


காமெடி..ஆனா சிரிப்பு வரலியே..!


தற்போது வரும் காமெடி படங்களில், கொஞ்சமாவது சிரிப்பூட்டும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் டைலாக்குள் “நகைப்பூட்டும் வகையில் இருக்கிறது” என்ற பேர்வழியில் பல இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் ஆங்காங்கே உபயோகப்படுத்த பட்டிருக்கும் தமிழக அரசியல் களத்தை வைத்து இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காமெடிகள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. 


குறிப்பாக, சமாதியின் மீது சத்தியம் செய்யும் காட்சி, சமாதியில் அமர்ந்து தியானம் செய்யும் காட்சி என அனைத்தும் அரசியல் கலாட்டாக்களை எடுத்து காண்பிக்கிறது. 


மேலும் படிக்க | Star Movie Review : கவினின் ‘ஸ்டார்’ படத்திற்கு 5 ஸ்டார் தரலாமா? தெளிவான திரை விமர்சனம்!


வடசென்னை போன்ற படங்களில் காதலையும், சண்டையையும் ஈசியாக கையாண்ட அமீருக்கு, இந்த படத்தில் ஏனோ இரண்டுமே வர மறுக்கிறது. பல இடங்களில் இவர் காதலில் சிரிக்கும் காட்சிகள் கூட யாராே அவரை வலுக்கட்டாயமாக செய்ய வைப்பது போல இருக்கிறது. ஆனாலும், படத்தில் இவரை தவிர வேறு யாருக்கும் பெரிய வேலை இல்லை என்பதால் இவருக்கு இப்படம் One Man Show-தான். 


555 படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாந்தினி, இந்த படத்தில் 5 வருடங்களுக்கு முன்னர் நடித்த போது வேறு மாதிரி இருக்கிறார். இப்போது வேறுமாதிரி இருக்கிறார். இதனால், இதை மேட்ச் செய்யவும் கதையில் சில இணைக்கதைகளை கோர்த்து விட்டுருக்கின்றனர்.  இவருக்கு தமிழ் சுத்தமாக வரவில்லையா அல்லது, வசனங்கள் மாற்றப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை. இதனால், இவர் வசனம் பேசும் இடங்களில் எல்லாம் இவரது முகத்திற்கு கேமராவே வைக்கப்படவில்லை.


வித்தியாசாகரின் இசை, கொஞ்சம் ஈர்த்தாலும் பல இடங்களில் தோற்று போகிறது. எஸ்.பி.பி கடைசியாக பாடிய ஒரு பாடல் இதில் இடம் பெற்றிருப்பது மட்டும் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. 


மொத்தத்தில், பொறுமையான நபரின் பொறுமையை கூட சாேதிக்கிறது திரைக்கதை. 


மேலும் படிக்க | Rasavathi Review : அர்ஜுன் தாஸிற்கு ராசியாக அமைந்ததா ‘ரசவாதி’? இந்த விமர்சனத்தில் தெரிஞ்சிக்கோங்க..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ