நடிகர் விஜய் இப்போது வம்சி பைடிபல்லியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்புகள் ஆந்திராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் புறப்பட்டார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, விஜயை  அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீடியோவில், கருப்பு நிறக் கண்ணாடியுடன் மாஸ்க் அணிந்திருக்கும் விஜய், டிக்கெட்டை எடுத்துக் கொண்டு டிக்கெட் பரிசோதிக்கும் பகுதிக்கு செல்கிறார். அங்கு கூட்டமாக இருந்ததால், அனைவருடனும் வரிசையில் காத்திருக்கிறார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் சூட்டிங் ஸ்பாட்டில் ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.    



மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் மனைவியிடம் இருந்து சென்ற மெசேஜ் - குதூகலமான பாலிவுட் பிரபலம்


பீஸ்ட் படத்தை முடித்தவுடன் நடிகர் விஜய், இயக்குநர் வம்சி பைடிபல்லியுடன் கூட்டணி சேர்ந்தார். ஏற்கனவே தோழா மற்றும் பிருந்தாவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய அவரின் கதை பிடித்திருந்ததால், இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். அவரைத் தொடர்ந்து நாயகியாக ராஷ்மிகா மந்தனா படக்குழுவில் இணைந்தார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷியாம் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் வாரிசு படத்தில் நடிக்கின்றனர். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் மற்றும் பைட் என எல்லாம் கலந்த கலவையாக வாரிசு படம் உருவாகிக் கொண்டிருக்கிறதாம். சரத்குமார் அண்மையில் அளித்த பேட்டில் ஒன்றில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப அனைத்து ஷெட்யூல் ஷூட்டிங் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளது. வாரிசு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கிவிட்டதாம்.


மேலும் படிக்க | பிசாசு -2 படத்தில் ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சிகள் நீக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ