விக்னேஷ் சிவன் மனைவியிடம் இருந்து சென்ற மெசேஜ் - குதூகலமான பாலிவுட் பிரபலம்

கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த ஜான்வி கபூருக்கு நயன்தாரா அனுப்பிய மெசேஜ் தீயாக பரவி வருகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 4, 2022, 03:19 PM IST
  • குட்லக் ஜெர்ரி படத்தில் நடித்த ஜான்வீ கபூர்
  • வாழ்த்துகளை அனுப்பிய நயன்தாரா
  • நயன்தாரா வாழ்த்தால் ஜான்வீ மகிழ்ச்சி
விக்னேஷ் சிவன் மனைவியிடம் இருந்து சென்ற மெசேஜ் - குதூகலமான பாலிவுட் பிரபலம் title=

ஜான்வி கபூர் சமீபத்தில் பிளாக் காமெடி படமான குட் லக் ஜெர்ரியில் நடித்தார். இது நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான கோலமாவு கோகிலாவின் ரீமேக். இந்தி ரீமேக்கின் டிரெய்லரைப் பார்த்ததும் நயன்தாரா, நடிகை ஜான்வியைப் பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும்போது குட்லக் ஜெர்ரியில் நடித்த அனுபவம் குறித்தும், நயன்தாரா தனக்கு அனுப்பிய மெசேஜ் குறித்தும் பேசினார்.

மேலும் படிக்க | பிசாசு -2 படத்தில் ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சிகள் நீக்கம்!

"நயன்தாரா என்னை பாராட்டிய செய்தியை கேள்விப்பட்டதும் அவருடைய எண்ணை வாங்கி அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவர் எனக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவரிடம் இருந்து எனக்கு ரிப்ளை வந்தது. அந்த மெசேஜில் திரைத்துறை வாழ்க்கையில் அரம்பக் கட்டத்திலேயே இப்படியான தைரியமான கதையை தேர்வு செய்து நடித்ததற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இது அருமையான வாய்ப்பு, இந்த அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கும் என கூறினார். நயன்தாராவின் பதிலால் நான் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த நாள் முழுவதும் நான் குதூகலமாக இருந்தேன்"  எனத் ஜான்வீ கபூர் தெரிவித்துள்ளார். 

மேலும், சிறந்த பொழுதுபோக்கு படமாக குட்லக்ஜெர்ரி எடுக்கப்பட்டிருப்பதாகவும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் ரசனையுடன் படம் இருப்பதால் நிச்சயம் வெற்றி பெறும். இதைவிட சிறந்த ஜெர்ரி இருக்க முடியாது என்றும் நயன்தாரா தெரிவித்ததாக ஜான்வி கபூர் தெரிவித்தார். தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப் படத்தை இந்தியில் சித்தார்த் சென் ’குட் லக் ஜெர்ரி’ என்ற பெயரில் இயக்கினார். ஜூலை 29 ஆம் தேதி டிஸ்னி +ஹாட் ஸ்டாரில் வெளியானது.

மேலும் படிக்க | வாரிசு பொங்கல் ரிலீஸ் இல்லையா? வெளியான அதிர்ச்சி தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News