கொரோனா முதல் அலைக்குப் பிறகு திரையரங்கு (Thearters) திறக்கப்பட்டும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வரும் மன நிலை ஏற்படவில்லை.  அதன்பின் பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை மீண்டும் திரைக்கு வர வைத்தது.  விஜயின் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் குடும்பங்களாக திரையரங்கிற்கு வந்தனர்.  2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவர வேண்டிய மாஸ்டர் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாஸ்டர்(Master) படத்தில் இடம்பெற்ற ஓபனிங் பாடலான வாத்தி கம்மிங்  (Vaathi Coming) தற்போது யூடியூபில் (Youtube) 250 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  கோலிவுட் வரலாற்றில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 3வது பாடலாக வாத்தி கம்மிங் அமைந்துள்ளது.  மேலும் வேகமாக 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடலாகவும், 2.6 மில்லியன் லைக்குகள் பெற்ற இரண்டாவது கோலிவுட் பாடலாகவும் உள்ளது. 


 



வாத்தி கம்மிங் பாடல் வெளிவருவதற்கு முன்பே அதன் லிரிக் வீடியோவும் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.   ஒரு பாடலின் லிரிக் வீடியோ மற்றும் படத்தில் இடம்பெற்ற வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது கோலிவுட்டில் இதுவே முதல் முறை.  வாத்தி கம்மிங் லிரிக் வீடியோவும் 133 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது.  மேலும் அனிருத்தின் இசையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் யூடியூபில் ஹிட்டானது.  தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.


ALSO READ தளபதி 66-ல் இணையும் ஜோக்கர் பட புகழ் ராஜூமுருகன்!


சமீபத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குடும்பத்துடன் நடனமாடி வீடியோவை சமூக வலைத் எனில் பகிர்ந்திருந்தார்.  தற்போது வாத்தி கம்மிங் படம் 250 மில்லியன் வியூஸ் கடந்thu, டுவிட்டரில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQY