தளபதி 66-ல் இணையும் ஜோக்கர் பட புகழ் ராஜூமுருகன்!

விஜயின் 66வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளதாகவும், தில்ராஜ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  இப்படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.  இதனால் இப்படத்தின் தமிழ் மொழி வசனங்கள் எழுத இயக்குனர் ராஜுமுருகன் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2021, 01:56 PM IST
  • நடிகர் விஜய் இந்த படத்திற்காக 120 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
  • இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே தான் சார்ந்த காட்சிகளை நடித்து முடித்துவிட்டு தற்போது ஹைதராபாத் சென்றுள்ளார்.
தளபதி 66-ல் இணையும் ஜோக்கர் பட புகழ் ராஜூமுருகன்!  title=

Thalapathy 66: தளபதி விஜயின் (Thalapathy Vijay) 65 வது படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.  இதனையடுத்து விஜயின் 66வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளதாகவும், தில்ராஜ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  இப்படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.  இதனால் இப்படத்தின் தமிழ் மொழி வசனங்கள் எழுத இயக்குனர் ராஜுமுருகன் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே 2016ஆம் ஆண்டு வம்சி இயக்கிய தோழா படத்தின் தமிழ் வெர்சன் னுக்கு ராஜுமுருகன் இணைந்து பணியாற்றியுள்ளார்.  அதனால் தளபதி 66 படத்திலும் ராஜுமுருகன் இணைந்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

ராஜுமுருகன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ஜிப்ஸி.  இப்படத்திற்கு சென்சார் போர்டு நிறைய மாற்றங்கள் சொல்லி கடைசியில் ஒருவழியாக படம் வெளியானது.  ஆனால் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் மக்களிடத்தில் சென்றடையவில்லை.  நடிகர் விஜய் இந்த படத்திற்காக 120 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.  இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் விஜய். 

beast

ALSO READ திரையரங்கை நோக்கி படை எடுக்கும் புதிய படங்கள்!

கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் (Master) திரைப்படம் ஊரடங்கும் வசூல் சாதனை படைத்தது.  தற்பொழுது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.  இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.  அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக பீஸ்ட் படக்குழு ரஷ்யா செல்ல இருக்கிறது.  இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே தான் சார்ந்த காட்சிகளை நடித்து முடித்துவிட்டு தற்போது ஹைதராபாத் சென்றுள்ளார்.  சமீபத்தில் இப்படத்தில் இணைந்த இயக்குனர் செல்வராகவன் அடுத்தகட்ட படப்பிடிப்புகளில் பீஸ்ட் படக்குளுவுடன் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  பீஸ்ட் படத்தினை பொங்கலுக்கு திரையரங்கில் வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe

Trending News