Vaazhai vs Kottukkali Box Office Collection : தமிழ் திரையுலகில், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு சில படங்கள் திடீரென நல்ல விமர்சனங்களுடன் நல்ல கலெக்ஷனையும் பெற்று நம்மை ஆச்சரியப்படுத்தும். அப்படி, சமீபத்தில் வெளியான இரண்டு படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொட்டுக்காளி திரைப்படம்:


கொட்டுக்காளி திரைப்படத்தை, பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க, அவருடன் இணைந்து மலையாள நடிகை அன்னா பென் நடித்திருக்கிறார். இது, அவரது முதல் தமிழ் படமாகும். இந்த படத்தை எடுத்து, கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பல்வேறு திரைப்பட விருது விழாக்களுக்கு இந்த படம் சென்றிருந்ததால் ரிலீஸ் செய்வதில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது. இந்த படத்தை, நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 


கொட்டுக்காளி திரைப்படம், பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யேக ஷோவிற்கு பிறகும், செலிபிரிட்டி ஷோக்களுக்கு பிறகும் பாசிடிவ் விமர்சனத்தில் நனைந்தது. இந்த படம், வெளியான முதல் நாளிலேயே சுமார் ஒரு கோடி கலெக்‌ஷனை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம், சரியான ரசிகர்களை சென்று சேர்ந்திருப்பதால், நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | மிரள வைத்த Climax! கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..கொட்டுக்காளி விமர்சனம்


வாழை திரைப்படம்:


தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க இயக்குநராக வளர்ந்து வருபவர், மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி நல்ல வரவேற்பை பெற்ற இவர், அடுத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. சொல்லப்போனால், நடிகர் வடிவேலுவிற்கு கம்-பேக் படமாகவே அமைந்தது. இதையடுத்து அவர் இயக்கிய படம்தான் வாழை. இந்த படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி, சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்த படம், பள்ளி மாணவர்களின் வாழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. 


வாழை திரைப்படத்தை பார்த்த பலர், மாரி செல்வராஜை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு நெகிழ்ந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. அதே போல, சிலர் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் மூலமாகவும் மாரி செல்வராஜிற்கு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, இப்படம் முதல் நாளில் மட்டும் 1.3 கோடி கலெக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் வீக்-எண்ட் என்பதால் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.


இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இரண்டுமே ஹிட் ஆன படங்கள்தான் என்பது சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. 


மேலும் படிக்க | வாழைத்தாரின் வாழ்வை கூறிய வாழை படம்! திரை விமர்சனம்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ