கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க அரசு பொதுமுடக்கங்களை அறிவித்தும், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டும் வந்தது. அதனையடுத்து கொரோனாவிற்கென தடுப்பூசியை கண்டுபிடித்து, மக்களுக்கு அவ்வப்போது இலவசமாக செலுத்தி வருகிறது. தடுப்பூசியினை செலுத்தி கொள்வதன் மூலம் கொரானாவிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.  பலரும் இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, தடுப்பூசி செலுத்துக்கொண்ட போதிலும், சிலரோ போதுமான விழிப்புணர்வு இன்மையால், இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இதனால் கொரோனா தொற்று அதிகம் பரவ அபாயம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக பல மாநில அரசுகளும், ஒவ்வொரு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சமீபத்தில் தமிழக அரசு தடுப்பூசி (Corona Vaccination) செலுத்தி கொள்ளாதவர்களை பொது இடங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடங்கள், பொது கூட்டங்கள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற பொது வெளியில் நடமாட தடை விதித்திருந்தது.


ALSO READ | இனி கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே திரையரங்கில் அனுமதி!


இதற்கிடையில் தற்போது பள்ளி, திரையரங்கு (Cinema Theater), மார்க்கெட், கல்லூரிகள் போன்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.


இந்நிலையில் தற்போது திரையரங்குகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என்கிற  உத்தரவை எதிர்த்து மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது.,


 



 


உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


ALSO READ | மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஐரோபாவில் எகிறும் தொற்று எண்ணிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR