வர்மா படத்திற்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலை காதலர் தினத்தில் வைரமுத்து வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு மொழில் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் வெளியாகி வெற்றி நடைப்போட்ட திரைப்படத்தின் தமிழ் பதிப்பினை நடிகர் துருவ் நடிப்பில் தமிழில் வர்மா என்னும் பெயரில் B Studios நிறுவனம் தயாரித்தது. விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக படக்குழுவினர் அறிவித்திருந்தது.


தெலுங்கில் E4 Entertainment தயாரிக்க, இயங்குநர் சந்தீப் வங்கா இயக்கியிருந்தார். இப்படத்தினை தமிழில் வெளியிட விரும்பிய இந்நிறுவனம் இயக்குநர் பாலா தலைமையில் செயல்மடும்  B Studios நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தின் படி இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க தமிழில் வர்மா என்னும் பெயரில் உருவானது. வெளியீடு வரை இத்திரைப்படம் வந்த நிலையில் தெலுங்கு பதிப்பில் இருந்து தமிழ் பதிப்பு வேறுபட்டிருப்பதாக கூறி வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனத்தார் தெரிவித்திருந்தது.


அதையடுத்து மீண்டும் துருவ் விக்ரமை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்து புது இயக்குனர் மூலம் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தை கௌதம் மேனன் இயக்கலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து வர்மாப் படத்திற்காக பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றின் வரிகள் நேற்று இணையதளத்தில் வெளியாகின.


பாடல் வரிகள் இதோ!!


மழையில்லை மேகமில்லை – ஆயினும்
மலர்வனம் நனைகின்றதே
திரியில்லை தீயுமில்லை – ஆயினும்
திருவுடல் எரியுண்டதே
ஒருவரின் சுவாசத்திலே
இருவரும் வாழுகின்றோம்
உடல் என்ற பாத்திரத்தில்
உயிர்ப்பொருள் தேடுகின்றோம்
காற்றில் ஒலிபோலே
கடலில் மழைபோலே
இருவரும் ஒருவரில் ஒன்றினோம்
*
பூக்கள் ஒன்றுதிரண்டு
படைகூட்டி வருவதுபோல்
இன்பம் ஒன்றுதிரண்டு
என்மீது பாய்கிறதே
என் ஆவி பாதி குறைந்தால்
என் மேனி என்னாகும்?
ஆகாயம் அசைகிறபோது
விண்மீன்கள் என்னாகும்?
தரையில் கிடந்தேனே
தழுவி எடுத்தாயே
தலைமுதல் அடிவரை நிம்மதி
*
பண்ணும் தொல்லைகளெல்லாம்
துன்ப வாதை செய்கிறதே
இன்னும் தொல்லைகள் செய்ய
பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே
திறக்காத ஜன்னல்கள் எல்லாம்
திடுக்கிட்டுத் திறக்கிறதே
எனக்குள்ளும் இத்தனை அறையா
எனக்கின்று புரிகிறதே
மழையில் தலைசாயும்
இலையின் நிலைபோல
எனதுயிர் உன்வசம் ஆனதே.