வைரமுத்து vs மணிரத்னம்; பொன்னி நதிக்கு போட்டியாக வைரமுத்து எழுதிய கவிதை
பொன்னியின் செல்வன் படத்தின் ‘பொன்னி நதி’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அந்த பாடலுக்கு போட்டியாக வைரமுத்து எழுதி வெளியிட்டிருக்கும் கவிதை வைரலாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. கல்கியின் எழுத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டத்தை திரை வடிவில் காட்சிப்படுத்தியிருக்கிறார் மணிரத்னம். செப்டம்பர் மாதம் இறுதியில் படம் வெளியிடப்படப்படும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களை விஞ்சும் அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகளும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகபோகமாக இருக்கிறது. ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான ’பொன்னி நதி’ ‘சோழா’ ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
இதில் பொன்னி நதி பாடல் காவரியின் வருகையையும், சோழ தேசத்தின் வளத்தையும் பறைசாற்றும் வகையில் உள்ளது. இந்தப் பாடலுக்குப் போட்டியாக தான் கவிப்பேரரசு வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சி காவரி ஆற்றின் பாலத்தின் மீது நின்று காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அழகை சொல்லொண்ணா பரவசத்துடன் பார்வையிட்ட அவர், அந்த பரவசத்தை தனக்கே உரிய பாணியில் எழுத்தில் கூர் தீட்டி கவிதை வரிகளாக காவிரியையும், சோழ தேசத்தியும் வாழ்த்தியுள்ளார்.
ஆரம்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்த அவர், திடீரென நீக்கப்பட்டார். அவருடைய நீக்கத்துக்கான காரணத்தை இயக்குநர் மணி ரத்னம் இதுவரை வெளியிட வில்லை. ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்டபோது, இது பற்றி மௌனம் சாதித்த அவர், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விளக்கம் கொடுக்கபட்டும் என முடித்துக் கொண்டார். இந்நிலையில் தான், காவிரியில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் நீரின் அழகைக் கண்டு, மெய்சிலிர்த்த அவர், கவிதையை வீடியோ வடிவில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நா. முத்துக்குமார் பெயரை சொன்னால் உள் நெஞ்சில் கொண்டாட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata