வலிமை திரைப்படம் குறித்த தரமான அப்டேட்!
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
சமீப காலங்களில் மிக அதிக அளவிலான ஏதிர்பார்ப்புகளை எற்படுத்தியுள்ள படங்களில் வலிமை படமும் ஒன்றாகும். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித்தை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத்.
வலிமை (Valimai) திரைப்படத்தில் அஜித்துடன் (Ajith), கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரணடாவது முறையாக அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை (Boney Kapoor) தயாரித்துள்ளார்.
ALSO READ | 99 Songs பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானால் பரபரப்பு: வைரல் ஆன வீடியோ
இந்த மாதம் 1 ஆம் தேதி வெளியாவதாக இருந்த வலிமை திரைப்படத்தின் அப்டேட் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வலிமை திரைப்படம் குறித்த முக்கிய செய்தியினை பகிர்ந்துள்ளார் நடிகர் ஆர்.கே.சுரேஷ். அஜித் சில அவுட் ஸ்டாண்டிங் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து உள்ளதாகவும், வலிமை படம் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வலிமை திரைப்படம் ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டுவரும் ஒரு படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR