தல அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர் குறித்த புதிய அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இந்த மாதம் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கு ட்ரீட்... யுவன் வெளியிட்ட கலக்கல் வலிமை அப்டேட்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 4, 2021, 10:47 AM IST
தல அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர் குறித்த புதிய அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!! title=

இந்த மாதம் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கு ட்ரீட்... யுவன் வெளியிட்ட கலக்கல் வலிமை அப்டேட்!

இயக்குநர் H.வினோத் (H Vinoth) இயக்கத்தில், போனி கபூர் (Boney Kapoor) தயாரிப்பில் அஜித்தின் 60 வது படமான வலிமை (Valimai) தற்போது தயாராகி வருகிறது. பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக வலிமை மாறி உள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழு ஸ்பெயின் செல்ல உள்ளது.

இறுதி கட்டத்தில் இருக்கும் வலிமை சூட்டிங் பற்றிய அப்டேட்டை அஜித் (Thala Ajith) ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெளிநாட்டில் நடக்க உள்ள 10 நாள் சூட்டிங் மட்டுமே மீதம் உள்ளது. இதில் வித்தியாசமான கெட்டப்பில் அஜித் நடிக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

2018-யில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் துவங்கப்பட்ட வலிமை படம் பற்றி எந்த அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன் பாட்டெழுதி உள்ளார். ஓடிசாவில் இருந்து பல அதிரடி நாட்டுப்புற டிரம்ஸ் கலைஞர்கள் யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றி வருவதாக அப்டேட் வெளியானது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய யுவன்சங்கர் ராஜா (Yuvan Shankar Raja), வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் புரோமோஷன் தொடர்பான வேலைகள் தயாராகி வருவதாக கூறி இருந்தார். 

ALSO READ | நடிப்பில் கலக்கும் தந்தை, நீச்சலில் கலக்கும் மகன்: மாதவன் மகன் செய்த சாதனை இதுதான்

No description available.

மோஷன் போஸ்டருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இந்த மாதத்தில் வெளிவரும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் அய்யாபா, அச்சியுத் குமார், மற்றும் சுமித்ரா உள்ளிட்ட நடிகர்களின் குழுவும் உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கேள்விப்படுகிறோம். இதற்கிடையில், மெட்ராஸ் ரைபிள் கிளப்பில் பயிற்சி பெற்ற அஜித்தின் படங்கள் சமூக வலைப்பின்னல் தளங்களில் வைரலாகிவிட்டன.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News