நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது. இந்நிலையில் வலிமை திரைப்படம் வரும் 25-ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரெண்டுல ஒன்னு பாக்கலாம்..! வெளியானது ஜாலியோ ஜிம் கானா பாடல்!


அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய படம் தான் வலிமை. போனி கபூர் படத்தை தயாரித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தின் படம் வெளியானதால் ரசிகர்கள் திருவிழா போல திரையரங்குகளை அலங்கரித்து கொண்டாடினர். ரோகிணி திரையரங்கில் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹீமா குரோஷி உள்ளடவர்கள் படம் வெளியான பிப்ரவரி24-ம் தேதி படத்தை கண்டு களித்தனர்.



கொரோனா சூழலால் நெருக்கடியில் இருந்த திரையரங்க உரிமையாளர்கள் வலிமை ரிலீஸால் மகிழ்ச்சி அடைந்தனர். அதோடு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள ஒரு சில முக்கிய திரையரங்குகளில் வலிமை வெளியாகி 25 நாட்கள் ஆனதை அடுத்து ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். சில திரையரங்குகள் 25வது நாளை கேக் வெட்டி எல்லாம் கொண்டாடினார்கள். தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் வலிமை 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 



அண்மையில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் அறிவிப்பும் வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாயகியாக நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ஸ்டைல் ஹா, கெத்தா ரீஎண்ட்ரி கொடுத்த நடிகை பாவனா!


இந்நிலையில், வலிமை படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ள நிலையில் Zee 5 ஓடிடி தளத்தில் வரும் 25-ம் தேதி படம் வெளியாகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR