விபத்தில் சிக்கிய வேலன், ரத்தினவேல்.. வேதநாயகிக்கு காத்திருந்த ஷாக் - வள்ளியின் வேலன் இன்றைய எபிசோட் அப்டேட் தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வள்ளி ஆரத்தி கொண்டு வந்து காட்ட அதை பார்த்து ரத்தினவேல் கடுப்பான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, ரத்தினவேல் கோபப்பட வேதநாயகி நீ முன்னாடி வந்தா தான் அவளுக்கு பிடிக்காதுல அப்படி இருக்கும் போது ஏன்மா வந்த என்று பேச வள்ளி பீல் ஆக ரத்தினவேல் சத்தம் போட ஆரத்தி தட்டை தவற விட்டு விடுகிறாள். இதனால் வேதநாயகி 5 நிமிஷம் உட்கார்ந்து விட்டு கிளம்ப சொல்கிறாள். 


மறுபக்கம் வேலனின் அம்மா சமைக்க தயாராக வேணி பிரியாணி செய்ய சொல்ல உன் அப்பா கட்டு கட்டா பணத்தை கொண்டு வந்து கொட்டுறாரு, தினமும் கறி சோறு தின்ன என்று கோபப்படுகிறாள். அடுத்து வேலனும் ரத்தினவேலும் மீட்டிங்கிற்கு கிளம்பி வருகின்றனர். 


கொஞ்ச நேரம் கழித்து அமைச்சர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியாக அதை பார்த்து வேலனின் குடும்பம் பதைபதைக்கிறது, ரேணுகா முதற்கொண்டு எல்லாரும் கண் கலங்குகின்றனர். அதே போல் மறுபக்கம் அம்மு செய்தி பார்த்து விட்டு அய்யய்யோ என்று கத்த எல்லாரும் ஓடி வந்து பதற்றமாகின்றனர். 


மேலும் படிக்க - நினைத்தேன் வந்தாய் அப்டேட்: ரவுடியை நினைத்து அலறும் மனோகரி.. அதிர்ச்சி கொடுத்த எழில்


பிறகு அம்முவின் அப்பா போன் போட்டு என்னாச்சு என்று விசாரிக்க ஒன்னும் ஆகவில்லை என்று தெரிய வருகிறது. கொஞ்ச நேரத்தில் இருவரும் ரத்தினவேல் மற்றும் வேலன் வீட்டிற்கு வர வேதநாயகி நீ ஆரத்தியை கொண்டு வந்து காட்டியதால் இப்படி ஆகி விட்டது என்று திட்ட வள்ளி சோகமாக முதல் முறையாக ரத்தினவேல் ரோடுல எவனோ பண்ண தப்புக்கு இவ என்ன பண்ணுவா என்று சப்போர்ட் செய்து பேச வள்ளி சந்தோஷமடைகிறாள். வேதநாயகி உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறாள். 


இதை தொடர்ந்து வேலனுக்கு அம்மாவிடம் போன் வந்ததும் அவன் எங்களுக்கு எதுவும் ஆகல அதுக்கு காரணம் வள்ளி மேடம் ஆரத்தி கொண்டு வந்து கீழே போட்டு 10 நிமிஷம் லேட்டா கிளம்ப வச்சது தான் என்று சொல்லியது தெரிய வருகிறது. 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - கார்த்திகை தீபம் அப்டேட்: முகத்திரையை அகற்றிய ரியா.. அதிர்ச்சி அடைந்த அம்பிகா.. அடுத்து என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ