கார்த்திகை தீபம் அப்டேட்: முகத்திரையை அகற்றிய ரியா.. அதிர்ச்சி அடைந்த அம்பிகா.. அடுத்து என்ன?

Karthigai Deepam Latest Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2024, 10:40 AM IST
கார்த்திகை தீபம் அப்டேட்: முகத்திரையை அகற்றிய ரியா.. அதிர்ச்சி அடைந்த அம்பிகா.. அடுத்து என்ன?  title=

Tamil Serial Karthigai Deepam Today (27.8.2024) Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மண்டபத்தில் ரியா தீபா போல் மாறுவேடத்தில் இருக்க குடோனில் இருந்து தீபாவும் தப்பித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அபிராமியின் உறவினர் ஒருவர் கல்யாணத்திற்கு வந்திருக்க அவர் அவசர வேலையாக செல்ல வேண்டி இருப்பதாக சொல்லி தீபாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல அபிராமி மைதிலி மற்றும் மீனாட்சியை கூப்பிட்டு தீபாவை அழைத்து வர சொல்கிறாள்.

இருவரும் தீபாவை கூப்பிட அவள் சும்மா சும்மா வர முடியாது என்று சத்தம் போட்டு துரத்தி விடுகிறாள், அவர்கள் அபிராமியிடம் விஷயத்தை சொல்ல அபிராமி உறவினரை சமாளித்து அனுப்பி வைக்கின்றனர். இதை தொடர்ந்து அம்பிகா உள்ளே நுழைய அபிராமி ரொம்ப நேரமா ஆள் இல் எங்க போய் இருந்த என்று கேள்வி கேட்கிறாள்.

உன் பையனுக்கும் தீபாவுக்கும் கல்யாணம், எதுவும் கொடுக்காமல் இருக்க முடியுமா? அதான் கிப்ட் வாங்க போய் இருந்தேன் என்று சொல்கிறாள். தீபாவுக்கு வாங்கிய ஜெயினை எடுத்து காட்டி இதை என் கையால் போட்டு விடணும் என்று சொல்ல ரியா அதிர்ச்சி அடைகிறாள். முடிந்த அளவுக்கு அம்பிகாவை நெருங்க விடாமல் முயற்சி செய்கிறாள்.

இதனால் அம்பிகாவுக்கும் தீபா இப்படி பண்றவள் இல்லையே என்ற சந்தேகம் எழுகிறது, இந்த சமயத்தில் இன்னொரு வயதான உறவினர் தீபாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல அபிராமி கூப்பிட வேறு வழியின்றி ரியா அந்த கிஃப்ட்டை வாங்கி கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறாள்.

அப்போது ரியா முகமூடியை கழட்டி ரம்யாவிடம் பேசி கொண்டிருக்க அந்த வழியாக வந்த அபிராமி இது மொத்தத்தையும் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். தீபா ரூபத்தில் இருப்பது ரியா தான் என்பதை அறிந்து கொள்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - பிரபல நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு! பதிலளித்த ரியாஸ் கான்..என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News