நினைத்தேன் வந்தாய் அப்டேட்: ரவுடியை நினைத்து அலறும் மனோகரி.. அதிர்ச்சி கொடுத்த எழில்

Ninaithen Vandhai TV Serial Watch Today Episode: இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2024, 12:36 PM IST
நினைத்தேன் வந்தாய் அப்டேட்: ரவுடியை நினைத்து அலறும் மனோகரி.. அதிர்ச்சி கொடுத்த எழில் title=

Ninaithen Vandhai TV Serial Today (27.08.2024) Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில், மனோகரி ஆகியோர் நான்கு குழந்தைகளுடன் துணி எடுக்க வந்திருக்க மனோகரியை தேடி வந்த ரவுடியும் அங்கு காத்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, எழில் துணி எல்லாம் எடுத்து முடித்த பிறகு கிளம்பலாமா என்று கேட்க மனோகரி வெளியே இருக்கும் ரவுடியை நினைத்து பயப்படுகிறாள். பிறகு இவர்கள் காரில் கிளம்பி வர ரவுடியும் இதை நோட்டம் விடுகிறான்.

அடுத்து மனோகரி தன்னுடைய அப்பாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவர் பயப்படாத மனோகரி, முதலில் உன் கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் அதுக்கப்பறம் அந்த ரவுடியை பார்த்து கொள்ளலாம் என்று சொல்கிறான்.

பிறகு வீட்டிற்கு வந்த நான்கு குழந்தைகளும் சாப்பிடாமல் சுடரை நினைத்து பீல் பண்ணுகின்றனர், எழில் சாப்பிட கூப்பிட்டும் சாப்பாடு வேண்டாம் துன்று சொல்கின்றனர். இதனால் எழிலும் வருத்தப்படுகிறான்.

இதை தொடர்ந்து எழில் மற்றும் மனோகரி என இருவரும் காரில் வெளியே வரும் போது எழில் ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு மனோகரியை வெயிட் பண்ண சொல்லி விட்டு சுடரை சந்தித்து ஒரு கிஃப்ட்டை கொடுக்கிறான். எழில் சுடரை சந்தித்து பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்த மனோகரி அதிர்ச்சி அடைகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - தலை முழுகிய ராமசந்திரன், தனிமரமாக நிற்கும் மாறன்.. வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News