தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரத்தினவேல் வீட்டுக்குள் ரஞ்சித் என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஞ்சித் நேராக வள்ளி ரூமுக்கு வந்து அவளை தொட வள்ளி அதிர்ச்சியாகி இவனைத் திட்டுகிறாள். இருந்தாலும் ரஞ்சித் அவளை நெருங்கி செல்ல ஒரு கட்டத்தில் ரஞ்சித்தின் கை பட்டு ரத்தினவேலின் போட்டோ கீழே விழுந்து உடைகிறது. இதனால் வள்ளி கடுப்பாகி அவனைத் திட்டி வெளியே துரத்துகிறாள். 


பிறகு அங்கு வந்த வேதநாயகி ரஞ்சித்தை திட்டி இங்க என்னடா பண்ற என வெளியே இழுத்து செல்கிறாள். அடுத்து ரத்தினவேல் வர வேதநாயகி ரஞ்சித் அமெரிக்காவிலிருந்து படிப்பு முடிச்சுட்டு வந்துட்டான் என்று சொல்கிறாள். மேலும் தனது மகனிடம் மாமா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு என்று சொல்ல ரஞ்சித் ரத்தினவேல் காலில் விழ அவனது பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட் கீழே விழ ரத்தினவேல் தேவையில்லாத பழக்கத்தை எல்லாம் கத்து வச்சிருக்க போல என்று பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். 


மேலும் படிக்க | அமைச்சர் சென்ற வாகனம் விபத்து! கண்கலங்கும் குடும்பத்தினர்.... வள்ளியின் வேலனுக்கு என்ன ஆச்சு?


அதைத் தொடர்ந்து வேதநாயகி ஏண்டா என் மானத்தை வாங்குற என்று திட்ட வெளிய வந்த ரஞ்சித் தம் அடிக்க ரத்தினவேலுக்காக கட்சிக்காரர்கள் காத்திருக்க உள்ளே வந்த வேலன் ரஞ்சித் சிகரெட் பிடிப்பதை பார்த்து வேதநாயகியின் மகன் என்று தெரியாமல் அவனை அறைகிறான். இதையடுத்து வேதநாயகி அங்கு வந்து யார் மேல கைய வெச்ச என்று வேலனிடம் வாக்குவாதம் செய்கிறாள். 


பிறகு ரத்தினவேல் வெளியே வர வேதநாயகி வேலன் தன்னுடைய மகனை அடித்து விட்டதாக குற்றம் சாட்ட வேலன் தேவையில்லாமல் யார் மேலேயும் அப்படி கைய வைக்க மாட்டான் என்று சப்போர்ட் பண்ணி பேசுகிறார். இதனால் ரஞ்சித் கடுப்பாகி மொட்டை மாடிக்கு வந்து மீண்டும் தம்மடிக்க அங்கு வந்த வேதநாயகி முதல்ல இவனை தான் ஒழிச்சு கட்டணும், உங்க மாமாவுக்கு நம்பிக்கையான ஆளா இருக்கிற வேலன் இவன் தான் என்று சொல்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க - கார்த்திகை தீபம் அப்டேட்: முகத்திரையை அகற்றிய ரியா.. அதிர்ச்சி அடைந்த அம்பிகா.. அடுத்து என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ