நடிகர் விஜய் இயக்குநர் வம்சியின் படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 66ஆவது படமான இதில், ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் பல நடிகர்கள் நடித்துவருகின்றனர். சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட குடும்பப் படமாக இது உருவாகிவருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய்யின் சர்கார், மெர்சல், பிகில், பீஸ்ட் போன்ற படங்களின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளையொட்டிதான் வெளியிடப்பட்டன. அதுபோலவே 66ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.


அதேபோல இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு ‘வாரிசு’ எனவும் தெலுங்கு வெர்சனுக்கு வாரிசுடு எனவும் தலைப்பு வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தந்தை- மகன் சென்டிமென்டாக இப்படம் உருவாவதால் இந்தத் தலைப்பு வைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் பற்றிய முக்கியத் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 



அதாவது ஐதராபாத்தில் நடந்துவந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது சென்னையில் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் செட் போட்டு படப்படிப்பு நடந்துவந்தது. இதனிடையே இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சிலரால் லீக் ஆகின. 


மேலும் படிக்க | நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்: வெடித்தது அடுத்த சர்ச்சை!


 


இதனால் படக்குழு கடும் அப்செட் ஆனது. ஆனால் புகைப்படங்கள் தொடர்ந்து லீக் ஆகிக் கொண்டே இருப்பதால் படப்பிடிப்பையே தற்போது நிறுத்தியுள்ளதாம் படக்குழு. ஆம், தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தியுள்ள படக்குழு வேறு இடத்துக்கு படப்பிடிப்பை மாற்றவுள்ளதாம். 


செட் மாற்றம் செய்ய சில தினங்கள் ஆகலாம் எனும் காரணத்தால் அடுத்த சில நாட்களுக்குப் படப்பிடிப்பு ஏதும் நடக்காது எனவும் கூறப்படுகிறது. அடுத்ததாக போகவுள்ள புதிய இடத்திலிருந்தும் போட்டோக்கள் லீக் ஆகாமல் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை படக்குழு விதிக்கவுள்ளதாம்.


மேலும் படிக்க | லோகேஷுக்கு கார்.. சூர்யாவுக்கு வாட்ச்.. அனிருத்துக்கு கமல் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR