வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
வனிதா விஜயகுமார் ஜூன் 27 அன்று ஒரு நட்சத்திர ஹோட்டலில் திரைப்பட தயாரிப்பாளர் என்று கூறப்படும் பீட்டர் பால் என்பவரை மணந்தபோது சர்ச்சையில் சிக்கினார்.
வனிதா விஜயகுமார் ஜூன் 27 அன்று ஒரு நட்சத்திர ஹோட்டலில் திரைப்பட தயாரிப்பாளர் என்று கூறப்படும் பீட்டர் பால் என்பவரை மணந்தபோது சர்ச்சையில் சிக்கினார். வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது பின்னர் தான் தெரிவந்தது.
பீட்டர் பால் (Peter Paul) தனக்கு விவாகரத்து ஆகாமலே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்திருந்தார் அவரது முதல் மனைவி எலிசபெத். சென்னை வடபழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எலிசபெத் புகார் அளித்திருந்தார்.
ALSO READ | இணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ
இதையடுத்து காவல் ஆய்வாளர், எலிசபெத்தின் கணவர் பீட்டர் விசாரித்துள்ளார். அப்போது தனது முதல் மனைவியான எலிசபெத்தை விவாகரத்து செய்துவிட்டு தான் வனிதா விஜயகுமாரை (Vanitha Vijayakumar) திருமணம் செய்ய தான் எழுதி கொடுத்து சென்றுள்ளார் பீட்டர். இதையடுத்து அடுத்த சில நாளிலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டனர். ஆனால், பீட்டரின் மனைவி எலிசபெத் தனக்கு பீட்டர் எந்தவித விவாகரத்தும் அளிக்கவில்லை என்றும் காவல்நிலையத்தில் கூறி பீட்டர் பால் மீது புகார் அளித்து இருந்தார்.
எலிசபத், ஏற்கனவேய வடபழனி அணைத்து மகளீர் காவல் நிலையத்திலும் மற்றும் சென்னை ஆணையர் அலுவலகத்திலும் தான்அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை எந்த நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரும் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ALSO READ | பீட்டர் பால் பற்றிய சமீபத்திய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வனிதா விஜயகுமார்