மணிரத்னம் இயக்கத்தில் சோழர்களின் சிறப்பான வரலாற்றை கூறும் விதமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்'.  கல்கி கைவண்ணத்தில் வெளியான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது, இந்த நாவலை படித்து கற்பனையில் காட்சிகளை வடிவமைத்து பார்த்தவர்கள் தற்போது அதை கண்களால் கண்டு ரசிக்கப்போகிறார்கள்.  இந்த கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அனைவரது மனதிலும் நிலைத்து நிற்கக்கூடிய அளவில் இருக்கும்.  இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், அஷ்வின், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த படம் வருகின்ற செப்டம்பர்-30ம் தேதி உலகளவில் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா


இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படத்திலிருந்து வெளியான 'பொன்னி நதி' என தொடங்கும் முதல் சிங்கிள் பலரது மனங்களையும் கொள்ளையடித்த நிலையில், சமீபத்தில் ஆதித்த கரிகாலனின் வெற்றியை குறிக்கும் விதமாக வெளியான இரண்டாவது சிங்கிளான 'சோழா சோழா' பாடலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த சோழா சோழா பாடல் ஹைதராபாத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது, இந்த விழாவில் மணிரத்தினம், சுகாசினி மணிரத்தினம், சீயான் விக்ரம், கார்த்தி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.  



தற்போது இப்படம் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  அதாவது தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளரான தில் ராஜு 'பொன்னியின் செல்வன்' படத்தின் தெலுங்கு பதிப்பின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களிடமிருந்து பெற்றிருக்கிறார்.  தற்போது தயாரிப்பாளர் தில் ராஜு அவரது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தளபதி விஜய்யின் 'வாரிசு' படம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா மற்றும் கியாரா அத்வானி நடிக்கும் 'ஆர்சி15' படத்தையும் தயாரித்து வருகிறார்.


மேலும் படிக்க | விரைவில் முடிகிறது விடுதலை - உற்சாகத்தில் சூரி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ