Veera TV Serial In Tamil: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘வீரா’ சீரியல். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலின் செப்டம்பர் 13ம் தேதி எபிசோட் இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வள்ளி வீடியோவை காட்டி உண்மையை உடைத்ததும் வீரா யோசித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, வீரா கண்மணி உன்னை சரி பண்றதுக்காக நான் அந்த வீட்டுக்கு வரேன் என்று சொல்லி தனது துணிகளை பேக் செய்து வெளியே வந்து ஆட்டோ எடுக்க முத்துலட்சுமி உட்பட எல்லோரும் காரணம் கேட்க எதுவும் சொல்லாமல் மாறனை வண்டியில் ஏற சொல்கிறாள். 


அதன் பிறகு மாறனுடன் ஆட்டோவில் கிளம்பி வரும் வீரா ஒரு மாலை கடையில் நிறுத்தி இரண்டு மாலை வாங்கி தனது கழுத்தில் ஒரு மாலையை போட்டுக்கொண்டு மாறனையும் மாலையை போட்டுக் கொள்ள சொல்கிறாள்.


மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல்: உயிருடன் இருக்கும் தீபா.. உண்மையை உடைத்த கீதா, கார்த்தி ஷாக்


இதையடுத்து மாறன் எங்க போறோம் என்று கேட்க வீட்டுக்கு போறோம் என்று மட்டும் சொல்கிறாள். பிறகு போகும் போது அம்மா கல்லறைக்கு சென்று விட்டு போகலாம் என்று சொன்னால் வீரா கல்லறைக்கு ஆட்டோவை விடுகிறாள். அடுத்து மாறன் மட்டும் கல்லறை அருகே சென்று அம்மாவிடம் வீரா கழுத்தில் விருப்பமில்லாமல் தாலி கட்டியது தப்புதான் அதுக்கு மன்னிப்பே கிடையாது என மனம் வருந்துகிறான். 


இதை தொடர்ந்து அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு கிளம்புகிறான். மறுபக்கம் ராமச்சந்திரன் வீட்டில் கண்மணி வக்கீலை வர வைத்து மாறன் மீராவுக்கு விவாகரத்து வாங்க எல்லா பேப்பரையும் ரெடி பண்ண மாறன் கையெழுத்து போடுவானா என்று கேட்க ராமச்சந்திரன் உங்க வீட்டு வாசல்ல தானே இருக்கேன் அதெல்லாம் வாங்கிடலாம் என்று நம்பிக்கை கொடுக்கிறார். 


வீரா எதுவும் மனசு மாறிட மாட்டாளே என்று ராமச்சந்திரன் கேட்க அதெல்லாம் அவ உறுதியா இருக்கா என்று கண்மணி சொல்லிக் கொண்டிருக்க மாறனும் வீராவும் ஆட்டோவில் மாலையில் கழுத்துமாக வந்து நிற்கின்றனர். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய வள்ளி சந்தோஷத்துடன் ஓடிப்போய் ஆரத்தி கரைத்து எடுத்து கொண்டு இருவரையும் வீட்டுக்குள் அழைக்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஆவலாக இருக்கிறதா? வீரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | ஒரே சிக்னலில் தீபா, கார்த்திக், தூங்கா! யார் யாரைப் பார்ப்பார்கள்? த்ரில்லிங் எபிசோட்! டோண்ட் மிஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ