ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் நாகசைதன்யா நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இருமொழிகளில் உருவான திரைப்படம்  ‘கஸ்டடி’. இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரேவதி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி வில்லனாகவும், ப்ரியாமணி வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் சரத்குமார், சம்பத்ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் மற்றும் பலர் நடிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் SR.கதிர் ஒளிப்பதிவு செய்ய வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உருவான கஸ்டடி திரைப்படம், கடந்த மே 12 ஆம் தேதி வெளியானது. முழுக்க முழுக்க பக்கா ஆக்ஷன் திரைப்படமான கஸ்டடி திரைப்படத்திற்கு டோலிவுட் மற்றும் கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்கள் கிடைத்தது. மறுபுறம் பெருமளவு வரவேற்பு கிடைக்காவிட்டாலும் இப்படத்திற்கு வெங்கட் பிரபு ரசிகரிடம் நல்ல வரவேற்பு இருந்தது.


மேலும் படிக்க | புஷ்பா செய்த சதியால் சக்திக்கு அதிர்ச்சி..மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இத்தனை ட்விஸ்டா!


இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் எட்டிய நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்தின் ஒடிடி ரிலிஸ் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் வருக்குற ஜூன் 9 ஆம் தேதி கஸ்டடி திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



 



 



ரசிகர்களை உற்சாகப் படுத்தும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகராகவும் பாடகாரகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த வெங்கட் பிரபு சென்னை 28 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமனார்.  இந்த படம் இளைஞர்கள் விருபத்தை கவர்ந்து பெருமளவில் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் போன்ற பல   என்டர்டெய்னிங் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். இதில் அஜித் குமார் நடிப்பில் உருவான மங்காத்தா திரைப்படம் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றது. சமீபத்தில் 'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் தான் கஸ்டடி. 


தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு  ‘தளபதி 68’ திரைப்படத்தை இயக்கவுள்ளார். ஏஜி எஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


 மேலும் படிக்க | ‘நண்பன்னாலே நல்லவன்தான்..’தளபதி முதல் நண்பன் வரை-நட்புணர்வை உலகிற்கு உணர்த்திய படங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ