சில வெளிநாடுகளில்தான் தேசிய நண்பர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. சமீப காலமாகத்தான் இந்தியாவில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1935ஆம் ஆண்டு முதல், இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் மிகவும் தூய்மையான உறவாக கருதப்படும் நட்பை போற்றும் வைகயிலும் நமது நண்பர்களுடன் நேரம் செலவிடும் வகையிலும இந்த நாள் பலராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கோலிவுட்டில் நட்பை மேன்மை படுத்தி காட்டிய சில படங்களின் லிஸ்டை பார்க்கலாமா?
“நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்..” தளபதி
தளபதி திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருந்தது. இதில், ரஜினி-மம்முட்டி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தனர். அந்த படத்தில் நடித்ததனாலோ என்னவோ இன்றளவும் இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நட்பு பாராட்டி வருகின்றனர். இதில் வரும் “காட்டுக்குயிலே மனசுக்குல்ல..” பாடல் நண்பர்கள் ஆந்தமாகவே கருதப்படுகிறது. ஆண்டுகள் பல கடந்தும், தேவா மற்றும் சூர்யாவின் நட்பு பல நண்பர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து காெண்டிருக்கின்றது. சமூக வலைதளத்தில் நட்பை பற்றிய இப்படத்தில் வரும் காட்சியை கொண்டாடப்பட்டு வருகிறது.
“வானம் பெரிசுதான் பூமி பெருசுதான் அதுக்கு மேலையும் நட்பு பெருசுதான்..” ப்ரண்ட்ஸ்
ப்ரண்ட்ஸ் 2001ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம். இந்தத் திரைப்படம் சித்திக்கின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்தது. விஜய், சூர்யா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களாக இப்படத்தில் நடித்திருந்தனர். அரவிந்த், சந்துரு மற்றும் கிருஷ்ண மூர்த்தி என்ற மூன்று நண்பர்கள் பற்றிய கதை இது. அரவிந்துக்கு பத்து வயது இருக்கும்போது தான் அறியாமல் செய்த தவறுக்காக தனது நண்பன் சந்துரு அவனை விட்டு செல்கிறான். பின்னர் இருவரும் எப்படி எந்த நிலையில் தங்கள் நட்பை தொடர்ந்தார்கள் என்பதே படத்தின் மைய கருவாகும். உயிருக்கே ஆபத்து வந்தாலும் நண்பனை விட்டுக்காெடுக்க கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்த படம் இது.
“We are the பாய்ஸ்..”பாய்ஸ்
ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம், பாய்ஸ். இத்திரைப்படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஐந்து நண்பர்கள் சேர்ந்து படிப்பை இழந்த பின்பு இசை மூலம் தங்களின் உடைந்து போன வாழ்க்கை எப்படி ஒட்டவைத்துக் கொண்டனர் என்பதே கதை. இந்த படத்தில், காதல் கூட ஒரு கட்டத்தில் முறிந்து போய்விடும். ஆனால் இவர்களின் நட்பு உடையவே உடையாது. ஒரு கட்டத்தில் ஒரு நண்பன், இன்னொரு நண்பனின் வாழ்க்கைக்காக உயிரையே விடுவான். இந்த படம், பல நண்பர்கள் குழுவிற்கு ஒன்றாக சேர்ந்து முயற்சித்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த படம் இது.
“காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா..” பிரியமான தோழி..
விக்ரமனின் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான பிரியமான தோழி. இதில் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி விஜயகுமார், விவேக், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டாலே உலக காதல் என்று நினைக்கிறது இந்த உலகம். இந்த நிலையில், நெருங்கிய நண்பர்களாக ஒரு ஆணும் பெண்ணும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய படம், “பிரியமான தோழி”. இந்த படத்தை பார்த்த பல 90ளு குழந்தைகள், “நமக்கு இப்படி ஒரு தோழி/தோழன் இல்லையே” என ஏக்கமடைவதுண்டு.
“மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு..”சென்னை-28:
சென்னை 600028, என்றால் முதலில் நினைவிற்கு வருவது அந்த படத்தில் வரும் நண்பர்களும் அவர்கள் செய்யும் சேட்டைகளும்தான். 2007இல் வெளியான இந்த திரைப்படத்தில் ஜெய், பிரேம் ஜீ, விஜய் வசந்த், சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். உள்ளூர் கிரிக்கெட்டையும் அதில் கோப்பையை வெல்ல பாேராடும் நண்பர்களையும் குறித்த கதைதான் இது. படம் பார்க்கும் அலுப்பே தெரியாமல் இரண்டரை மணி நேரம் ஜாலியாகவே போகும் படம் இது. நட்பிற்கு இடையூராக இருக்கும் காதல், மோதல், துரோகம் ஆகிய அனைத்துமே இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
பாஸ் (எ) பாஸ்கரன்:
2010ல் வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படம், பாஸ் என்கிற பாஸ்கரன். சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குனர் இராஜேஷின் இரண்டாவது திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். சுய தொழில் செய்யும் ஒரு நண்பன், டிகிரி கூட முடிக்காமல் அரியர் எக்ஸாம் எழுதும் ஒரு நண்பன். இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் ரகளைதான் படம்.
“நல்ல நண்பன் வேண்டுமென்று..” நண்பன்
பாலிவுட்டில் வெளிவந்த 3 இடியட்ஸ் என்ற படத்தின் தமிழ் ரீ-மேக்தான், நண்பன் திரைப்படம். ஹீரோவாக விஜய்யும் அவரது நண்பர்களாக ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா ஆகியோர் நடித்திருந்தனர். 10 வருடங்களுக்கு முன் காணாமல் போன ஒரு நண்பனை தேடிய பயணமாகத்தான் இந்த கதை ஆரம்பிக்கும். போகப்போக, ஜாலியான சண்டைகள், நட்பில் பிளவு போன்ற அனைத்தும் இதில் காண்பிக்கப்பட்டிருக்கும். விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு சண்டை காட்சிகள், பஞ்ச் வசனங்கள் இல்லாமல் நடித்த படம், இதுதான்.
மேலும் படிக்க | தன்னை பைத்தியம் என்று கலாய்த்த பிரபல இயக்குநருக்கு பார்த்திபன் அளித்த ‘நச்’ பதில்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ