‘மங்காத்தா’வுல முதல்ல நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?!
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மத லீலை திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மாநாடு படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் மன்மத லீலை. அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் அடல்ட் காமெடிப் படமாக இப்படம் உருவாகியுள்ளது. மன்மத லீலைக்குப் பிறகு நாகசைதன்யாவை வைத்து படம் இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு.
தமிழ் மற்றும் தெலுங்கு என மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தின் ப்ரீ- புரொடக்ஷன் பணிகள் ஐதராபாத்தில் நடந்துவருகிறதாம். வெங்கட் பிரபு கூறிய கதை நாகசைதன்யாவுக்கு மிகவும் பிடித்துப்போனதாகவும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரீமேக்காக அல்லாமல் புதிய கதையிலேயே இப்படத்தை இயக்கவுள்ளாராம் வெங்கட் பிரபு.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ டீம் எடுத்த புது முடிவு- ரசிகர்கள் அப்செட்!
இந்த நிலையில், நடிகர் நாகசைதன்யா குறித்துத் தெரிவித்துள்ள வெங்கட் பிரபு, அஜித்தை வைத்து தான் இயக்கிய மங்காத்தா படத்தில் நாகசைதன்யாவை நடிக்கவைக்கும் திட்டத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அர்ஜூன் நடித்த கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவை நடிக்க வைக்கத்தான் அவர் முதலில் ப்ளான் செய்து வைத்திருந்தாராம். அதன் பிறகுதான் அர்ஜூன் அதில் இணைந்திருக்கிறார்.
நாகசைதன்யா தற்போது தெலுங்கில் தாங்க் யூ எனும் படத்தில் நடித்துவருகிறார். மேலும் தனது முதல் வெப் சீரிஸான ‘தூதா’ விலும் அவர் நடித்துவருகிறார்.
மேலும் படிக்க | ‘வேலைக்காரன்’ படத்தின் காப்பியா அஜித்- 62 ?!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR