விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியாக ’குக் வித் கோமாளி’ உள்ளது. தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் 3வது நிகழ்ச்சிலும் கோமாளிகளாக தொடர்கின்றனர். நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு ஆகியோர் இருக்கின்றனர். காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோக்களில் புதிய டிரெண்டை செட் செய்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சூப்பர் சிங்கரில் வாத்தியாராக மாறிய ’விக்ரம்’ கமல்


மன அழுத்தம் மற்றும் வெறுப்பு என பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழும் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கத் தொடங்கினர். ஆனால், அண்மையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடுவர் வெங்கடேஷ்பட் தெரிவித்த கருத்தை மீம் கிரியேட்டர்கள் தங்களின் கன்டென்டாக மாற்றி, விமர்சனம் செய்யத் தொடங்கினர். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பார்த்ததால் குழந்தை இல்லாத தம்பதிக்கு தாய்மை அடையும் பாக்கியம் கிடைத்தாக குறிப்பிட்டார்.



இதனை கன்டென்டாக எடுத்து தங்கள் இஸ்டத்துக்கு மீம்ஸ்களை பறக்கவிட்ட நெட்டிசன்கள், காமெடி மெட்டீரியலாகவும் மாற்றிவிட்டனர். இது வெங்கடேஷ் பட் மனதை வெகுவாக காயப்படுத்தியது. ஆதங்கம் தாங்க முடியாமல் தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில், மீம்ஸ் கிரியேட்டர்கள் செயல் வருத்தமடைய செய்வதாகவும், என்னை இகழ்வதாக நினைத்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டுமே அதன் வேதனையும் வலியும் புரியும் எனத் தெரிவித்தார்.



அவரின் இந்தப் பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். அன்பைப் பொழிந்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த வெங்கடேஷ்பட், இந்த ஆதரவால் தான் மீண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வந்திருப்பதாக கூறியுள்ள அவர், இந்த அன்புக்கு முன்பு மீமாவது கீமாவது... நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு என மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கும் நெட்டிசன்களை ஹார்டை அள்ளி விட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | வறுத்தெடுத்த நெட்டிசன்கள்... உருக்கமாய் பதிவிட்ட குக் வித் கோமாளி நடுவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR