Vettaiyan Movie Review Tamil: ஜெய்பீம் படத்தை இயக்கி, தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான டி.ஜே.ஞானவேல், வேட்டையன் படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கியிருக்கிறார். இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இப்படம் எப்படியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கதைச்சுருக்கம்:


குற்றவாளியை பாரபட்சம் பார்க்காமல் பார்த்த நேரத்தில் சுட்டுத்தள்ளும் நேர்மையான அதிகாரி, ஒரு அப்பாவியை கொலை செய்தால் என்ன ஆகும்? இதுதான் வேட்டையன் படத்தின் ஒருவரி கதை. 


கதை விவரம்:


கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்மை தவறாத காவல் அதிகாரியாக இருக்கிறார் அதியன். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் இவர், கொலை குற்றவாளிகளையும், கஞ்சா விற்பவர்களையும், தாதாக்களையும் பாரபட்சம் பார்க்காமல் கொலை செய்து பெயர் பெறுகிறார். இவரது நேர்மையை அறியும் அரசு பள்ளி ஆசிரியை சரண்யா (துஷாரா விஜயன்) தான் பணி புரியும் பள்ளியில் கஞ்சா பதுக்குவது குறித்து அவருக்கு தெரியப்படுத்துகிறார். இதனால் இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவாகிறது. 


சென்னைக்கு பணி மாறுதல் வாங்கி வரும் சரண்யா, தான் பணிபுரியும் பள்ளியிலேயே கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார்? கொலையாளியை ரஜினி கண்டுபிடித்தாரா? போன்ற பல கேள்விகளுக்கு விடையாக வருகிறது மீதி கதை. 


பக்கா கமர்ஷியல் படம்..ஆனால் கதை இருக்கு!


ரஜினி நடிக்கும் படங்கள் கமர்ஷியல் படங்களாகதான் இருக்கும் என்பது பலருக்கு தெரியும். இந்த படமும் அப்படிப்பட்ட ஒரு படம்தான். ஆனால், இதில் கதை ஹீரோவாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங் என அனைவருக்கும் இதில் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. படம் ஆரம்பிக்கும் போதே டைட்டில் கார்டும், மனசிலாயோ பாடலும் ஆரம்பத்திலேயே போடப்பட்டு விட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கொஞ்சம் மெதுவாக சென்ற திரைக்கதை, பின்பு வேகம் எடுத்தது. இடைவேளை வரை அதே வேகத்தில் சென்ற திரைக்கதை, அதற்கு பின்பு கொஞ்சம் மெதுவாக சென்றது. 


மேலும் படிக்க | Vettaiyan Twitter Review : வேட்டையன் வச்ச குறி தவறிடுச்சா? படம் எப்படி? ட்விட்டர் விமர்சனம்!!


Twist இல்லாத கதை!


வேட்டையன் படத்தின் கதையில், ஓரிரு இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பெரிதாக ட்விஸ்ட் இல்லை. துஷாரா கொலை செய்யப்படும் இடத்தில் மனதில் கனம், பகத் பாசிலின் சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தது. அமிதாப் பச்சன் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து முடிக்க, முதுமையிலும் நடனமாடி, சண்டை போட்டு ரசிகர்களை கவர்கிறார். 


ஏமாற்றிய விஷயங்கள்..


வேட்டையன் திரைப்படம், முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் இல்லை என்றாலும், கதை ஓரளவிற்கு ஸ்ட்ராங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு, ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. திரைக்கதையில் முதல் 30 நிமிடங்களில் இருந்த வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது படத்திற்கு நெகடிவாக அமைந்திருக்கிறது. 


ப்ளஸ் என்னென்ன?


வேட்டையன் திரைப்படத்தில் பகத் பாசில்  பாட்ரிக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரும் ரஜினிகாந்தும் சேர்ந்து செய்யும் லூட்டிகள் ரசிக்கும் படி இருந்தன. அனிருத்தின் இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலமாக அமைந்திருந்தன. எளிதில் கணிக்க கூடிய கதை என்றாலும், டைலாக்குகள் மற்றும் காட்சியமைப்புகள் நன்றாக இருப்பதால் படம் தேறியிருக்கிறது. 


மேல்தட்டு மக்கள் தவறிழைக்கும் போது அவர்களை விழுந்து விழுந்து பாதுகாக்கும் இந்த அரசாங்கம், அதுவே அடித்தட்டு மக்கள் ஏதேனும் சிறு தவறு செய்தால் அவர்களை குற்றவாளி போல தண்டிப்பது ஏன்? என்ற கேள்வியை படம் ஆணித்தனமாக நம்மிடம் கேட்கிறது. ஒரு குற்றம் நடக்கிறது என்றால் அதற்கு மக்கள் ரியாக்ட் செய்யும் விதத்தையும் படத்தில் விமர்சனம் செய்திருக்கின்றனர். 


மொத்தத்தில்…


படம் ஓகே ரகமாக இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் மட்டுமன்றி நல்ல படத்தை பார்க்க விரும்புபவர்களும் வேட்டையன் படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.


மேலும் படிக்க | வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் 52 நிமிடம் பேசிய ரஜினி!! அப்படி உதட்ட என்ன சொன்னார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ