Vettaiyan Movie Twitter Review : டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம், வேட்டையன். ரஜினியின் 170வது படமான இது, ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த படமாக இருந்தது. இந்த நிலையில், விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை தினங்களை முன்னிட்டு, அக்டோபர் 10ஆம் தேதியான இன்று வேட்டையன் படம் வெளியாகியிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா? உண்மையாகவே படம் எப்படி? ரசிகர்கள் கூறியிருக்கும் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
முதல் விமர்சனம்:
வேட்டையன் திரைப்படத்திற்கு முதல் ஆளாக விமர்சனத்தை கொடுத்தவர், அப்படத்தின் இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத்தான். இவர், தான் இசையமைக்கும் படங்களுக்கு, இமோஜிக்கள் மூலமாக விமர்சனம் தெரிவிப்பது வழக்கம். பீஸ்ட், ஜெயிலர், லியோ என பல படங்களுக்கு விமர்சனத்தை கொடுத்த இவர், இப்படத்திற்கும் இமோஜி மூலம் விமர்சனம் கொடுத்தார்.
— Anirudh Ravichander (@anirudhofficial) October 4, 2024
அம்புக்குறி, ஃபையர் இமோஜி உள்ளிட்ட இமோஜிக்களை போட்டு பதிவிட்டிருந்தார். இதற்கு அர்த்தம், “குறி வெச்சா, இரை விழனும்” எனும் வேட்டையன் படத்தின் டைலாக்தான் என கூறப்பட்டது. அதற்கு ஏற்ப, படமும் வைத்த குறி தப்பாமல் ஜெயித்துள்ளதாக இவர் சூசகமாக கூறியிருப்பதாக பலர் தெரிவித்தனர்.
ட்விட்டர் விமர்சனம்:
வேட்டையன் திரைப்படம், தமிழ் நாட்டில் வெளியாவதற்கு முன்னர் இந்தியாவின் பிற இடங்களில் வெளியானது. தமிழகத்தில் காலை 9 மணிக்குதான் வேட்டையன் படத்திற்கு முதல் ஷோ. ஆனால் இந்திய நேரப்படி, அமெரிக்காவில் அதிகாலை 4 மணிக்கே இப்படம் வெளியாகி விட்டது. அங்கு, இப்படத்தை பார்த்தவர்கள் இதற்கான விமர்சனத்தை தெரிவித்திருக்கின்றனர்.
வேட்டையன் திரைப்படத்திற்கு ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அந்த படத்திற்கான விமர்சனத்தை தெரிவித்திருக்கின்றனர். படத்தில் 100 சதவிகிதம் தலைவரின் மாஸ்தனம் இருப்பதாகவும், இரண்டாம் பாதி நல்ல சினிமா அனுபவமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
#VettaiyanReview
.
US distributor about @RedGiantMovies_ teams vettaiyan review.
.
1st Half: 100% Thalaivar mass
.
2nd Half: Greater cinema at it's peak
.
Over all #Jailer kind of BO expected.
.#VettaiyanBooking#VettaiyanFrom10thOctoberhttps://t.co/2RLvwf1bHw— காக்கையன் (@vhmJwNO64VtE8LK) October 9, 2024
ஜெயிலர் படம் அளவிற்கு இப்படம் நல்ல கலெக்ஷனை பெறும் என்றும் கூறியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் 52 நிமிடம் பேசிய ரஜினி!! அப்படி என்ன சொன்னார்?
மாஸ் இடைவேளை:
வேட்டையன் திரைப்படத்தை முதல் பாதி வரை பார்த்த ஒரு ரசிகர் படத்தின் இடைவேளை காட்சி நன்றாக இருப்பதாக கூறி பதிவிட்டிருக்கிறார்.
INTERVAL
Brilliant @tjgnan
Intro BGM @anirudhofficialThalaivaaaaaaaaaaaa #Vettaiyan #VettaiyanTheHunter #VettaiyanFDFS
—(@msdjleo) October 10, 2024
படம் பார்த்த ஒரு ரசிகர், த்ரில்லர் படமாக இருக்கும் வேட்டையன் படம் எளிதாக கணிக்க கூடிய கதையுடன் இருப்பதாக பதிவிட்டிருக்கிறார்.
#Vettaiyan First Half Review
Never Expected this kind of Film from TJ Gnanavel
Literally like Seat edged Thriller Film
Adey ipadilam evanavathu sonna avane serupale adi Easily Predictable Investigation Scenes
— இன்பா (@onlyvijay74) October 10, 2024
வேட்டையன் படத்தின் முதல் பாதி கொஞ்சம் சுமாராகத்தான் இருப்பதாகவும், ரஜினியின் பிற படங்களை போல அல்லாமல், இந்த படத்தில் மிகக்குறுகிய அளவிலேயே கமர்ஷியல் படம் சார்ந்த காட்சிகள் குறைவாக இருப்பதாகவும் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
#Vettaiyan Average 1st Half!
Being narrated so far as a true crime investigation drama with very little commerical elements unlike Rajinis previous films. While some parts engage so far, others are mundane and run of the mill. Not bad but a lot relies on the 2nd half now.
— Venky Reviews (@venkyreviews) October 10, 2024
தற்போது வரை, வேட்டையன் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கிறது.
வேட்டையன் திரைப்படம்:
ஜெய்பீம் படத்தை இயக்கி, பட்டித்தொட்டியெங்கும் புகழ் பெற்ற நடிகர் டி.ஜே.ஞானவேல். இவரது அடுத்த படமாக உருவாகியிருக்கிறது வேட்டையன். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து இந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் பல வருடங்கள் கழித்து இப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கின்றனர். இவர் மட்டுமன்றி, மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரோகிணி, அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு வெளியான வேட்டையன் படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில் ரஜினிகாந்த், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஆக நடித்திருக்கிறார் என்பதும் அதன் மூலம் தெரிந்தது. ரஜினிகாந்தை, கமர்ஷியல் எலிமெண்டை தாண்டி, இதில் நடிக்க வைத்திருப்பதாக இயக்குநர் முன்கூட்டியே கூறியிருந்தார். சொன்னதை அவர் செய்திருக்கிறாரா? இல்லையா? என்பதை ரசிகர்கள் விமர்சனம் மூலம் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் படிக்க | வேட்டையன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்!! விஜய்யை விட கம்மியா? எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ