தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருவர். இவர் 2011-ம் ஆண்டு வெளியான "அவர்களும் இவர்களும்" என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷும் ஒரு நடிகர் ஆவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் நடித்த கிட்டத்தட்ட பத்துக்கு மேற்பட்ட படங்களில் வெளியாகி உள்ளன. அதில் பண்ணையாரும் பத்மினியும், காக்காமுட்டை, குற்றமே தண்டனை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இவருக்கு ஆனந்த விகடன் சார்பாக கடந்த ஆண்டு(2016) நம்பிக்கை விருது வழங்கப்பட்டது.


Video: லுங்கியை அடுத்து டவல் கட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிய பிரபல நடிகை!


திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசக் கூடியவர். தற்போது இவர் ‘துருவ நட்சத்திரம்’, ‘வட சென்னை’, போன்ற படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில், தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்துவருகிறார். அவர் உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


பங்கி ஜம்பிங் செய்யும் இந்திய அழகியான நடாஷா சூரிக்கு காயம்


வீடியோ: