பங்கி ஜம்பிங் செய்யும் இந்திய அழகியான நடாஷா சூரிக்கு காயம்

இந்தோனேஷியாவில் பங்கி ஜம்பிங் செய்யும் முன்னால் இந்திய அழகியான நடாஷா சூரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Last Updated : Mar 21, 2018, 06:10 PM IST
பங்கி ஜம்பிங் செய்யும் இந்திய அழகியான நடாஷா சூரிக்கு காயம்

2006-ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் வென்ற நடாஷா சூரி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பல டிவி நிலக்ச்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். யில் இவர் அண்மையில் கடை திறப்பு விழாவுக்கு இந்தோனேஷியா சென்றிருந்தார். கடை திறப்பு விழா முடிந்தவுடன், அங்கு நடைபெற்ற பங்கீ ஜம்பிங்(Bungee Jump ) பங்கேற்றார்.

நடாஷா சூரி ஆற்றை ஒட்டிய பகுதியில் பங்கி ஜம்பிங் செய்யும்போது துரதிர்ஷ்டவசமாக கயிறு அறுந்து ஆற்றுக்குள் விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விரைவில் குணமடைய வேண்டும் இவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

2016-ல் இவர் மலையாள படமான "லயர் (Liar)" மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் தற்போது பலத்தகார வழக்கில் சிறையில் இருக்கும் திலிப் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News