ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வித்யா நம்பர் 1. இந்த சீரியலில் கடந்த வாரம் வித்யா தான் ஷண்முகம் வேடத்தில் இருக்கிறாள் என்பது சஞ்சய்க்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரமோகன் எதிர்ச்சையாக ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போக அப்பெண் சந்திரமோகனுக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து மோகனுடன் நெருக்கமாக இருப்பது போல போட்டோக்கள் எடுத்துக் மிரட்ட தொடங்குகிறாள். இது அனைத்தும் ப்ரீத்தியின் சதி என தெரிய வருகிறது. 


அடுத்ததாக சஞ்சய் மாறுவேடத்தில் இருப்பது வித்யா தான் என்பது தனக்குத் தெரியும் என்பதை வித்யாவிடம் சொல்ல ப்ரீத்தியின் சதியால் சந்திரமோகன் பெரும் மனக்குழப்பத்தில் இருக்கிறார்.


அதனை தொடர்ந்து வேதா குடும்பத்துடன் ஜவுளி கடைக்கு செல்ல அங்கே அந்தப் பெண் வர சந்திரமோகனிடம் புடவை எடுத்து தருமாறு கேட்டு பிரச்சனை செய்ய வித்யா சண்முகமாக இருந்து இவை அனைத்தையும் கவனிக்கிறாள்.


அதன் பிறகு அந்தப் பெண் வீட்டிற்கு வந்து சந்திரமோகன் தன்னுடன் வாழ்ந்ததாக கூறி பிரச்சனை செய்ய வித்யா இதற்கு முன் அந்தப் பெண்ணால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து பதிலடி கொடுத்து போலீஸிடம் பிடித்துக் கொடுக்கிறாள். 


அடுத்ததாக வீட்டில் பரிகார பூஜைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்க வித்யா சண்முகமாகவும் வித்யாவாகவும் ஒரே நேரத்தில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 


மேலும் படிக்க | Thalapathy 68 அப்டேட்! 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் பிரபல ஹீரோ?


இந்த பூஜையை கெடுக்க ப்ரீத்தி அம்மன் காலடியில் இருக்கும் தாலியை மறைத்து வைத்திருக்க வித்யா ப்ரீத்தி கையாலேயே அந்த தாலியை எடுத்து வர மாஸ்டர் பிளான் செய்கிறாள். தொடர்ந்து ப்ரீத்தி பல சதி வேலைகளை செய்ய அடுத்து நடக்கப் போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


எனவே வித்யா நம்பர் 1 சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். அடுத்ததாக நடக்கப்போவது என்ன? வித்யா அடுத்து என்ன செய்ய போகிறாள் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே வித்யா நம்பர் 1 சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மறக்காமல் கண்டுகளியுங்கள். 


தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான்  'வித்யா நம்பர் 1' என்னும் சீரியல்.


வித்யா நம்பர் 1 சீரியலை எங்கு பார்ப்பது


வித்யா நம்பர் 1  சீரியல் கடந்த மே மாதம் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | பிரபல திரைப்பட தயாரிப்பாளர் உயிரிழப்பு..! முதல்வர் உள்பட பலர் இரங்கல்…!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ