நடிகர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்கள் கூட வைரலாக வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர், வித்தியாசமான செயல்களை செய்து பதிவிட்டு வருகின்றன. அப்படி ஒரு நடிகர், வித்தியாசனமான செயலால் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளார். அந்த நடிகர் யார்? அவர் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டது ஏன்? இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வித்யூத் ஜம்வால்:


பாலிவுட் நடிகர்கள் பலர், தென்னிந்திய படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாகியுள்ளனர். தமிழில் துப்பாக்கி படம் பெரிய ஹிட் ஆனது.ம் அப்படம் ஹிட் ஆனதற்கு ஹீரோ விஜய் ஒரு காரணம் என்றால், வில்லனாக நடித்த இவரும் ஒரு காரணம். உயரம், கட்டுமஸ்தான உடல், கணீரென்ற குரல் என அனைத்துமே இவருக்கு மக்களை பிடிக்க வைத்தது. 


வித்யூத் நடித்த படங்கள்:


வித்யூத் ஜம்வால் துப்பாக்கி படத்திற்கு முன்னரே பில்லா 2 படத்தில் நடித்தார். ஆனால், அதன் மூலம் அவர் பெரிதாக வெளியில் தெரியவில்லை. 2014ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு நண்பராக இவர் நடித்திருந்தார். இதையடுத்து அவர் கமாண்டோ 2, ஜங்க்லீ, யாரா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 


நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட வித்யூத்…


வித்யூத் ஜாம்வால், தனது முழு நிர்வாண புகைப்படத்தை இணையதள பக்கத்தில் வெளியிட்டவுடன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதன் கேப்ஷனை பார்த்தவுடன் அனைவரும் அமைதியாகிவிட்டனர். அவர், கடந்த 17 வருடங்களாக வருடத்தில் 7 முதல் 10 நாட்களுக்கு இமயமலைக்கு சென்று வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வருடங்களில் தனக்கு கிடைத்த புகழ், சொகுசு என அனைத்தையும் துறந்து இயற்கையுடன் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 


மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகள்! யார் யார் தெரியுமா?


நிர்வாணமாக தண்ணீருக்குள் இறங்குவதையும், ஆற்றில் குளிப்பதையும், மரத்தடியில் சமைத்து சாப்பிடுவது போன்ற போட்டோக்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும், “நான் யார் என்பதை அறிந்து கொள்வதன் முதல் படி இது” என்று குறிப்பிட்டிருக்கிறார். 


ரசிகர்கள் விமர்சனம்..


வித்யூத் ஜாம்வால் தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் பலர் அவரை விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இது போல நிர்வாணமாக காட்டிற்குள் சுற்றினாலும், அதற்கு ஆன்மீக ரீதியான விளக்கங்களை கொடுத்தாலும் இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று குறிப்பிட்டிருக்கின்றனர். 


 



வித்யூத் ஜாம்வாலின் புதிய படம்..


வித்யூத் ஜாம்வால்,  தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவதற்கு முன்னர் தனது புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த படத்தின் பெயர், க்ரேக். இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாகிறது. இந்த படத்தை ப்ர்மோட் செய்வற்காக அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தனியாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர்கள்! லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் நடிகை..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ