தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, சில நாட்களுக்கு முன்பு தனது 39வது பிறந்தநாளை காெண்டாடினார். இதையொட்டி, அவரது கணவர் விக்னேஷ் சிவன், அவருக்கு ஒரு காரை பரிசாக கொடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நயன்தாரா-விக்னேஷ் சிவன்:


கோலிவுட் திரையுலகில் சுமார் 21 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொடு கட்டி பறந்து காெண்டிருப்பவர், நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவை வைத்து 2015ஆம் ஆண்டு ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கினார். இதில் ஒன்றாக பணிபுரிந்த போது இருவரும் காதலில் விழுந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. தற்போது இவர்களுக்கு உயிர், உலக் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். 


நயன்தாராவின் பிறந்தநாள்..


நடிகை நயன்தாரா, கடந்த 18ஆம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்நாளை வழக்கம் போல அனைவரும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டு கொண்டாடினர். விக்னேஷ் சிவனும் தனது மனைவிக்கு ஸ்வீட்டான சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். 


ஆடம்பர கார்..


பெரும்பாலான திரை பிரபலங்கள் விலை உயர்ந்த கார்களை வைத்து உபயாேகிக்கின்றனர். நயன்தாராவும் ஏற்கனவே சில கார்களை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். தற்போது அவரது கார் கலக்ஷன் லிஸ்டில் புதிதாக இன்னொரு கார் இணைந்துள்ளது. நடிகர் விக்னேஷ் சிவனர், தனது ஆசை மனைவியின் பிறந்தநாளையாெட்டி அவருக்கு ஒரு ஆடம்பர காரை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நயன்தாரா, இந்த இனிய பரிசுக்காக தனது கணவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 


விலை என்ன? 


நயன்தாரா, அந்த காரின் Symbol-ஐ பதிவிட்டிருந்தாரே தவிர, காரின் பெயரையோ காரின் போட்டோவையோ போடவில்லை. ஆனால், இது குறித்து ஆராய்ந்த ரசிகர்கள், இது  ‘மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேட்ச்’  (Mercedes-Benz Maybach) வகை கார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதன் விலை சுமார் ரூ.2.69 கோடியில் இருந்து 3.40 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | விஜயகாந்த் உடல் நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை தகவல்!


நயன்தாராவின் புதிய படம்..


நடிகை நயன்தாரா, தற்போது ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இதில் நயன்தாராவிற்கு ஜோடியாக ஜெய் நடிக்கிறார். கடைசியாக ‘ராஜா ராணி’ படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த இவர்கள், 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் மூலம் ஒன்றாக நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமார், சத்யராஜ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


கலாச்சாரத்தை பின்பற்றும் ஒரு குடும்பத்தில் பிறந்த பெண், சமையல் கலைஞராக மாற வேண்டும் என்று விரும்புகிறாள். இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத்தான் அன்னபூரனி படத்தில் கதையாக காண்பித்துள்ளனர். இப்படம், நாளை (டிசம்பர் 1) திரைக்கு வருகிறது. 


தொழிலதிபராக மாறிய நயன்..


கதாநாயகிகள் பலர், தனித்தனியாக சுய தொழிலும் செய்து வருகின்றனர். அந்த வகையில், நயன்தாராவும் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். 9ஸ்கின் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பிராண்டில் லிப் பாம், லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. 


மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் செம ரொமான்ஸ்! போர்வைக்குள் காதல் லீலைகள்-வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ