தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த அவர் பலமுறை தனிநபர் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அசராத நயன் தன் உழைப்பால் தற்போது நடிகைகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்துவருகிறார். அவர் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் திருமணம் செய்துகொண்டார். கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில்  வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் செய்திருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



அவர் செய்திருக்கும் ட்வீட்டில், “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
இரட்டை ஆண் குழந்தைகள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, நமக்கு 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டு இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ஆனால் இந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு பலரிடம் எழுந்துள்ளது. எது எப்படியோ திருமணமாகி தற்போது தாயாகியிருக்கும் நயனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | 100 கோடி வசூல் செய்த நயன்தாராவின் லேட்டஸ்ட் திரைப்படம்


முன்னதாக, நயன்தாராவின் திருமணம் ஓடிடியில் எப்போது வெளியாகும் எனும் எதிர்பார்ப்பு பலரிடம் இருந்துவந்தது ஆனால்  சுமார் ஒரு மாத காலம் ஆன பிறகும் கூட வீடியோ வெளிவராததால் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன. நெட்பிளிக்ஸுக்கும் நயன்தாரா தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் தொடர்பாக ஏதேனும் மனக்கசப்புகள் இருக்கலாம் எனவும் அதுதான் தாமதத்துக்கான காரணமாக இருக்கலாம் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த ப்ரோமோ ஒன்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெலியிடப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ