முதலாம் ஆண்டு திருமணநாள்.. மகன்களுடன் நயன்தாரா: வைரலாகும் புகைப்படம்
திருமண நாளை ஒட்டி, குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
2003 ஆம் ஆண்டு வெளிவந்த மனசினக்கரே என்ற மலையாள படத்தில் நயன்தாரா நடித்திருந்தாலும் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் நயன்தாராவுக்கு தமிழில் மிகப் பெரிய இடத்தை பெற்று தந்தது. பின்னர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என 80 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா. மேலும் தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானோடு ஜவான் என்ற படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் entry கொடுத்திருக்கிறார். இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி, சுமார் 8 ஆண்டுகள் காதலித்து வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமண செய்துக் கொண்டனர்.
மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமண நிகழ்வில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என குறைவான நபர்களே கலந்து கொண்டனர். திருமணம், ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கோலிவுட்டின் இந்த க்யூட் கபுள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் படிக்க | கடுப்பான லோகேஷ் கனகராஜ்! சமாதானம் செய்வாரா விஜய்?
இதற்கிடையில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி இந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகள் பிறந்தது. இந்த இரட்டை குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக நயன்தாரா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நயன்தாரா, தன் குழந்தைகள் உயிர் மற்றும் உலகத்துடன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களுடன் எமோஷனல் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் அவர்,
என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே
1 வருடம் நிறைய தருணங்கள் நிறைந்தது!
நிறைய ஏற்ற தாழ்வுகள்
எதிர்பாராத பின்னடைவுகள்! சோதனை நேரங்கள்!
ஆனால் அபரிமிதமான அன்பும் பாசமும் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்கு வருவது மிகுந்த நம்பிக்கையை மீட்டெடுக்கிறது மற்றும் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட அனைத்து கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலையும் அளிக்கிறது!
என் உயிரோடும் உலகத்தோடும் அனைத்தையும் ஒன்றாகப் பிடித்துக் கொண்டு
நாம் அடைய விரும்பும் கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலையும் குடும்பம் அளிக்கிறது. குடும்பம் கொடுக்கும் பலம் எல்லாற்றையும் மாற்றுகிறது! சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க பாடுபடுவது தான் என்னை போன்றவர்களுக்கு தேவையான ஊக்கம்
என்று பதிவிட்டுள்ளார். தற்போது இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | தமன்னாவிற்கு ஜெயிலர் ஷூட்டிங்கில் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ