Hitler Review: விஜய் ஆண்டனி நடித்துள்ள ஹிட்லர் படத்தின் திரைவிமர்சனம்!
Hitler Review: தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ஹிட்லர் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தனா இந்த படத்தை இயக்கியுள்ளார், இவர் இதற்கு முன் படைவீரன் மற்றும் வானம் கொட்டட்டும் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தவிர இந்த படத்தில் ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, இயக்குனர் தமிழ், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் ஹிட்லர் படத்திற்கு இசையமைத்துள்ளனர். டி.டி.ராஜா மற்றும் டி.ஆர். சஞ்சய் குமார் ஆகியோர் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
மேலும் படிக்க | விஜய் சத்யா, ஷெரின் நடித்துள்ள தில் ராஜா படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
புதிதாக சென்னையில் வங்கி வேலைக்காக வரும் விஜய் ஆண்டனி ரெடின் கிங்ஸ்லி உடன் வசதி வருகிறார். இவருக்கு கதாநாயகி ரியா சுமனை பார்த்தவுடன் பிடித்து விடுகிறது, பிறகு இருவருமே ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மறுபுறம் தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருவது போல் காட்டப்படுகிறது. அதில் ஆளுங்கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் சரண்ராஜ் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் வெற்றி பெற மாட்டார் என்று கருத்துக்கணிப்புகள் வருகிறது. இதனால் பணம் கொடுத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிடுகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் மக்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்படும் பணம் திருடப்படுகிறது மற்றும் நிறைய கொலைகளும் நடக்கிறது. இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன் நியமிக்கப்படுகிறார். கொலைகள் மற்றும் பணத்தை திருடியது யார்? இதற்கும் விஜய் ஆண்டனிக்கும் என்ன சம்பந்தம் என்பதே ஹிட்லர் படத்தின் கதை.
மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த தனா எழுதி இயக்கி உள்ள படம் தான் ஹிட்லர். இவரின் முந்தைய படங்களைப் போலவே இந்த படமும் டெக்னிக்கலாக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. கதையாக ஏற்கனவே பார்த்த கேள்விப்பட்டதாக இருந்தாலும் திரைக்கதையில் கூடுதல் சுவாரசியத்தை சேர்த்துள்ளார் இயக்குனர். இது படம் பார்க்கும் நமக்கு வியப்பை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக சென்னை லோக்கல் ட்ரைனில் நடைபெறும் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ஹீரோ விஜய் ஆண்டனி வழக்கம்போல துரு துருவென நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்சன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நன்றாகவே தன்னை மெருகேற்றி உள்ளார். ஹீரோயின் ரியா சுமன் திரையில் அழகாக தெரிகிறார். கதையில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளது, அதனை புரிந்து கொண்டு நன்றாகவே நடித்துள்ளார்.
இவர்களை தாண்டி படம் முழுக்க ஸ்கோர் செய்வது கௌதம் வாசுதேவ் மேனன் தான். போலீஸ் அதிகாரியாக வழக்கம் போல தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு வலு சேர்கிறது. இவர்களை தாண்டி வில்லனாக வரும் சரண்ராஜ், விவேக் பிரசன்னா, இயக்குனர் தமிழ் ,ஆடுகளம் நரேன் ஆகியோரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக உள்ளது. முரளியின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தது.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து விடுகிறது. அதேபோல தான் படத்தின் கதையும் செல்கிறது. நிறைய தமிழ் படங்களில் பார்த்த காட்சிகள் ஹிட்லரில் வேறு ஒரு வடிவத்தில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் இதனை மறக்கடிக்கும் அளவிற்கு வேகமாக திரைக்கதை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் ஹிட்லரில் உள்ளது.
மேலும் படிக்க | Meiyazhagan Review : மெய்யழகன் படம் எப்படி? சுமாரா? சூப்பரா? திரை விமர்சனம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ