வெண்ணிலா கபடிக்குழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை இயக்கிய சுசீந்திரன், அடுத்ததாக தான் இயக்கும் புதிய படத்துக்கு ‘வள்ளி மயில்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர் பாரதிராஜா, ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘ஜதி ரத்னலு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த பரியா அப்துல்லா, ‘வள்ளி மயில்’ ஆக நடிக்கிறார். ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமைய்யா, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ் லீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை விஜய் கே.சக்கரவர்த்தி கவனிக்க படத்தொகுப்பை ஆண்டனி மேற்கொள்கிறார். 


மேலும் படிக்க | முதல்வருக்கு நன்றி.! தமிழில் கடிதம் எழுதிய இலங்கை அதிபர்


படத்தின் கதை 1980-களில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR