மீண்டும் இணையும் அட்லீ - விஜய்! வெளியானது முக்கிய அப்டேட்!

அட்லீ இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் படத்தில் விஜய் நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வட்டமடித்துக்கொண்டு இருக்கிறது.
தென்னிந்திய திரையுலகில் நடிகர் விஜய்க்கு இருக்கும் புகழ் குறித்து சொல்ல வேண்டிய தேவையில்லை, ஏனெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இவரை கொண்டாடுகின்றனர். இவரது படம் பற்றிய அறிவிப்பு வெளியானாலே ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள், அந்த படம் வெளியாகி பல நாட்கள் ஆனாலுமே ரசிகர்கள் அந்த படத்தின் வைபிலேயே சுற்றிக்கொண்டிருப்பார்கள். கதைக்காக படம் பார்ப்பவர்களை விட நடிகர் விஜய்க்காக படம் பார்ப்பவர்களே அதிகம் என்றுகூட சொல்லலாம், அந்தளவிற்கு விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு இருந்து வருகிறது. இளம் இயக்குனர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கும் நடிகர் விஜய் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து சில படங்களை பண்ணியிருக்கிறார். கடந்த ஆறு வருடங்களில் மூன்று பிளாக்பஸ்டர் படங்களை இந்த கூட்டணி கொடுத்துள்ளது.
மேலும் படிக்க | எப்போது வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்?... உறுதிப்படுத்தினார் தமன்
தற்போது இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் தகவல் என்னவென்றால், இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணையப்போவதாகவும் அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகப்போவதாகவும் சில செய்திகள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த படத்தை அல்லு அர்ஜுனின் 'புஷ்பா:தி ரைஸ்' படத்தை தயாரித்த பிரபலமான தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க போகிறது என்றும், சமீபத்தில் தயாரிப்பு குழு அட்லீ மற்றும் விஜய்யிடம் படத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் எந்த தரப்பினராலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான தெறி, பிகில் மற்றும் மெர்சல் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, இதனால் ரசிகர்கள் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். அடுத்ததாக அட்லீ ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தில் விஜய் சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | திரில்லர் ஜானரில் ஜிவி பிரகாஷ்; நாளை டீசர் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ