விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'பீஸ்ட்' கடந்த ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  முதல் ஷோ முடிந்ததில் இருந்து படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், இது வசூலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.  யாரும் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் சாதனை  படைத்துள்ளது.  தமிழ்நாடு தியேட்டர் அசோசியேஷன் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் 'பீஸ்ட்' கமர்ஷியல் ஹிட் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் பேசிய அவர்,  'பீஸ்ட்' படத்திற்கான வரவேற்பு திரையரங்கு உரிமையாளர்களை மகழ்ச்சிபடுத்தியுள்ளது என்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இப்படி பண்ணிடீங்களே நெல்சன்! பீஸ்ட் திரைவிமர்சனம்!


 


கொரோனா தொற்றுக்கு பிறகு திரையரங்கில் 100% பார்வையாளர்களுடன் வெளியான முதல் விஜய் படம் இதுவாகும். கடந்த ஆண்டு 'மாஸ்டர்' படம் 50% பார்வையாளர்களுடன் மட்டுமே வெளியானது. 'பீஸ்ட்' அதிகாலை காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்று தந்துள்ளது.  குறைந்த நாட்களில் 'பீஸ்ட்' படம் 100 கோடியைத் தாண்டி, எல்லா நேரத்திலும் அதிக வசூலை பெற்ற தமிழ்ப் படமாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது, மேலும் இப்படம் தமிழ்நாடு உட்பட பல இடங்களில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்தது. 



நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் ஒரு ரா ஏஜெண்டாக நடித்தார், படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அனிருத் ரவிச்சந்தரின் இசை மற்றும் பின்னணி இசை அமைந்திருந்தது.  மறுபுறம், யாஷ் நடித்த 'கேஜிஎஃப்: அத்தியாயம் 2' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள் தமிழகத்தில் கூடுதல் காட்சிகளைப் பெற வைத்துள்ளது.  இந்த வாரம் முழுவதிற்கும் ஏற்கனவே பீஸ்ட் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ள நிலையில் தற்போது கேஜிஎப் படத்திற்கு எக்ஸ்ட்ரா காட்சிகள் சேர்ப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.



மேலும் படிக்க | தளபதி 66-ல் சரத்குமாரின் ரோல் என்ன? இதோ அப்டேட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR