தளபதி 66-ல் சரத்குமாரின் ரோல் என்ன? இதோ அப்டேட்

தளபதி 66-ல் சரத்குமார் இணைந்திருக்கும் நிலையில் அவருடைய ரோல் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 14, 2022, 08:03 PM IST
  • தளபதி 66-ல் நடிக்கும் சரத்குமார்
  • என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்?
  • லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் அப்டேட்
தளபதி 66-ல் சரத்குமாரின் ரோல் என்ன? இதோ அப்டேட் title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படத்துக்கு நெகட்டிவான விமர்சனம் எழுந்துள்ளது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு, கேஜிஎப் படத்துடன் எல்லாம் ஒப்பீடு செய்யப்பட்டது. ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றமடைந்துள்ளனர். காலங்காலமாக தமிழ் திரைப்படங்களில் எடுக்கப்பட்ட பழைய கதையையே இப்படத்திலும் நெல்சன் எடுத்திருப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளனர். மேலும், விஜய் இந்தப் படத்துக்கு எப்படி? ஓகே சொன்னார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும் படிக்க | KGF Chapter 2: கேங்ஸ்டரா? மான்ஸ்டரா?

ஆனால், வசூலில் பீஸ்ட் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூலில் முந்தைய படங்களின் சாதனையை முறியடித்துள்ள பீஸ்ட், புதிய ரெக்கார்டை பதிவு செய்துள்ளது. பீஸ்டுக்கு அடுத்த நாள் வெளியாகியிருக்கும் கேஜிஎப் திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. பீஸ்ட் படத்துக்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்கள் எல்லாம் கேஜிஎப் படத்துக்கு மாறியுள்ளன. இதனால், அடுத்தப் படத்தில் நல்ல கம்பேக்கை விஜய் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது அவர் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என பெயர்சூட்டப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இப்படத்துக்கான பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக சூட்டிங்கும் நடைபெறுகிறது. சர்பிரைஸாக இப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்துள்ளார். அவர் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்? என கேட்டு வந்த ரசிகர்களுக்கு அப்டேட் கிடைத்துள்ளது. சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் தயாராகிறது. 

மேலும் படிக்க | புத்தாண்டு வாழ்த்து சொன்ன ராம்சரண்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News