வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள 'தளபதி 67' படத்திற்கான பூஜை டிசம்பர்-5ம் தேதி சென்னை ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது.  பட பூஜை குறித்து படக்குழு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது மற்றும் இங்கு வந்தவர்கள் அனைவருக்கும் செல்போன் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டது.  'தளபதி 67' பட பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்களை படக்குழுவினரே விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வாரிசு தெலுங்கில் வெளியாகவில்லை என்றால் என்ன? Hi 5 பட விழாவில் கே ராஜன் பேச்சு!



நீண்ட நாட்களாகவே தளபதி 67 படம் குறித்து சமூக வலைத்தளங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிக்கொண்டே இருந்த நிலையில் தற்போது படத்திற்கு பூஜை நடத்தப்பட்ட ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.  தளபதி 67 படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தும் விதமான வீடியோ ஒன்று உருவிக்கப்படவுள்ளது, இந்த காட்சி டிசம்பர் 7ம் தேதியன்று சென்னை பகுதியில் எடுக்கப்படும் என்றும் அதன் பின்னர் இந்த வேலை ஓரிரு நாட்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது.  இந்த வீடியோவானது சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்திருந்த 'விக்ரம்' படத்தின் 'ஆரம்பிக்கலாமா' என்ற ப்ரோமோவை போல இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  


டிசம்பர் 5ம் தேதி நடைபெற்ற 'தளபதி 67' பட பூஜை விழாவில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோரும், இவர்களுடன் சேர்த்து மேலும் சில பிரபலங்களும் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.  மேலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி இந்த படத்தில் நடிகை திரிஷா, ப்ரியா ஆனந்த் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டது மற்றும் விஷால் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தான் தற்போது அர்ஜுன் ஒப்பந்தமாகி இருப்பர் என்றும் சில செய்திகள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | முதல் படத்தின் சம்பளம் எவ்வளவு? ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ