தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஸ்டார் இயக்குநராக உருவெடுத்துவிட்டார். இவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் விரும்பும் நிலையில், அடுத்ததாக தளபதி விஜயை இயக்க இருக்கிறார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் மாஸ்டர் படம் வெளிவந்து வெற்றிப் படமாக மாறியது.
மேலும் படிக்க | Bigg Boss Tamil 6: தலைவர் பதவிக்கு போட்டா போட்டி, இப்படி ஒரு டாஸ்க் ஆ..
இந்த கூட்டணி அடுத்த படத்தில் மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே பலமுறை லோகேஷ் கனகராஜிடம் அப்டேட் கேட்டும் அரசல்புரசலாக பேசிய அவர், முழுமையான அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் மட்டுமே கொடுக்கும் என தெரிவித்துவிட்டார். தன்னால் தளபதி 67 அப்டேட்டை கொடுக்க முடியாது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தாலும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தளபதி 67 அப்டேட்டை மட்டுமே ரசிகர்கள் கேட்கின்றனர்.
விரைவில் தளபதி 67 படத்தின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றாலும், இதில் லோகேஷ் கனகராஜூக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மாநகரம் முதல் விக்ரம் வரை எடுத்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருப்பதால், அவரும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு முதல் படத்தில் கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபனாக பேசியுள்ளார். அந்த பேட்டியில், தான் இயக்கிய முதல் படத்துக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், டிடிஎஸ் போக 4.50 லட்சம் ரூபாய் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தமிழ் தொலைக்காட்சி ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு; நவம்பர் முதல் டிவி இல் Blacksheep
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ