‘லியோ’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய், தனது 68ஆவது படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த தகவல்களும் பரவி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தளபதி 68:


நடிகர் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் விஜய், தன் பங்கு ஷூட்டிங்கினை முடிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து, விஜய் வெங்கட் பிரபுவுடன் தனது 68ஆவது படத்தில் கைகோர்க்கிறார். இதில் நடிக்க இருக்கும் நடிகர்கள் மற்றும் இதர படக்குழு பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தையடுத்து விஜய் சினிமாவிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மேலும் படிக்க | இந்தியில் ரீ-மேக் ஆகிறது விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம்..! யார் ஹீரோ தெரியுமா..?


சினிமாவிலிருந்து விலகும் விஜய்..?


நடிகர் விஜய், தனது 68ஆவது படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து 3 ஆண்டுகள் ப்ரேக் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. விஜய் அரசியலில் நுழைய போகிறார் என்ற தகவலும், அவர் சினிமாவை விட்டு விலக உள்ளார் என்பது போன்ற தகவலும் நெடு நாட்களாகவே ரசிகர்கள் மத்தியில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் விஜய் 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் அவர் பேசிய சில விஷயங்கள் அரசியல் ரீதியாக இருந்ததால் இவர் அரசியலுக்கு வருவது குறித்த வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன. இருப்பினும், விஜய் அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து கூறுகையில், இவை வெறும் வதந்திகள்தான் என்றும். நடிகர் விஜய் சினிமாவிலிருந்து விலகுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். 


எம்.ஜி.ஆர் வழியில் விஜய்?


மறைந்த முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர் தனது 50ஆவது வயதில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றார். அவர், தான் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தன் படங்கள் மூலமாக மக்களுக்கு கருத்து சொல்வது, அரசியல் ரீதியிலான வசனங்கள் பேசுவது என்றிருந்தார். விஜய்யும் தற்போது அதையேத்தான் செய்து வருகிறார். இவருக்கு தற்போது 49 வயது ஆகின்றது. இவர், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரசியலில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதனால், எம்.ஜி.ஆர் போல ஷார்பாக ஸ்கெட்ச் போட்டு விஜய் அரசியலுக்குள் நுழைகிறாரா என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது. 


லியோ பட சர்ச்சை:


லியோ படத்தில் இடம் பெற்றுள்ள “நான் ரெடிதான் வரவா..” என்ற பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் 22ஆம் தேதியன்று வெளியானது. இதனை, விஜய் பாடியிருந்தார். லிரிக்கல் வீடியோவாக வெளியாகியிருந்த இந்த பாடலில் விஜய் வாயில் சிகரெட் வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒருவர், ‘நான் ரெடி’ பாடல் புகைப்பழகத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளதாக கூறி புகார் அளித்தார். இதையடுத்து, அப்பாடலில் “புகை பழக்கம் உயிரைக்கொல்லும்” என்ற எச்சரிக்கை வாசகத்தை படக்குழு இணைத்தது. காஷ்மீரில் நடைப்பெற்ற படப்பிடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, சஞ்சய் தத் போன்ற பலருடன் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சென்னையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த படம், கேங்க்ஸ்டராக இருந்து திருந்தி வாழும் மனிதனுக்கும் அவனை விடாமல் துரத்தும் அவனுடைய கடந்த காலத்திற்கும் நடுவில் நடக்கும் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ