Na Ready: ‘இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்..’ நா ரெடி பாடலின் ப்ரமோ வெளியீடு..!

Na Ready Song Promo: லியோ படத்தில் விஜய் பாடியுள்ள ‘நா ரெடி’ பாடலின் ப்ரமோ இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்று வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 20, 2023, 05:41 PM IST
  • லியோ படத்தில் இடம் பெற்றுள்ளது ‘நா ரெடி’ பாடல்.
  • இதை விஜய் பாடியுள்ளார்.
  • இதன் முதல் சிங்கிளின் ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Na Ready: ‘இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்..’ நா ரெடி பாடலின் ப்ரமோ வெளியீடு..! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் பாடல் நா ரெடி. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். இதன் ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

இந்த ப்ர்மோ வீடியோ வெளியான சில மணித்துளிகளிலேயே பல ஆயிரம் வியுஸ்களை கடந்துள்ளது. இதை, லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இன்று ப்ரமோ வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதியன்று முழு பாடலும் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஆனந்த கூத்தாட்டம் போட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | சினிமாவிற்கு 'குட்-பை’ சொல்லும் லோகேஷ்? இயக்குநரின் ‘இந்த’ முடிவால் ரசிகர்கள் சோகம்!

ரசிகர்கள் செம குஷி...

லியோ படம் குறித்து எந்த அப்டேட் வந்தாலும் ரசிகர்கல் ஓடோடி வந்து அதை ஆதரிப்பது வழக்கம். அதிலும் இந்த பாடலை விஜய் பாடியுள்ளார் என்றால், கேட்கவா வேண்டும். நா ரெடி பாடலின் ப்ரமோ வீடியோ இன்று வெளியாகும் என அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து இன்று 33 விநாடிகளை கொண்டுள்ள நா ரெடி பாடலின் ப்ரமோ வீடியோ தற்போது ட்ரெண்டிங்கிள் உள்ளது. ஜூன் 22ஆம் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

விஜய் பாடி ஹிட் ஆன பாடல்கள்:

விஜய் நடிகர் என்பதை தாண்டி சிறந்த பாடகராகவும் தான் நடிக்கும் படங்களில் தடம் பதித்து வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு பாடலை பாடுவது விஜய்யின் வழக்கம். இதை, தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை கடைப்பிடித்து வருகிறார், விஜய். “ஹே பாப்பா நீ கொஞ்சம் நில்லு..” என்ற பாடல் முதல், இவர் வாரிசு படத்தில் பாடிய “ரஞ்சிதமே..” பாடல் வரை அனைத்தும் சூப்பர் ஹிட்தான். ஃப்ளாப்பான இவரது படங்களில் கூட இவர் பாடிய பாடல் மட்டும் அனைவருக்கும் நினைவிருக்கும். இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் பாடியிருந்த “குட்டி ஸ்டோரி” பாடல், பலருக்கு மோட்டிவேஷனல் ஸ்டோரியாகவே அமைந்தது. இது போல, விஜய்யின் ஹிட் லிஸ்ட் பாடல்களில் தற்போது “நா ரெடி..” பாடலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசியல் வரிகளா? 

விஜய், தான் கலந்து கொள்ளும் மேடை விழாக்கள், தன்னுடையை படத்தின் வசனங்கள் என தான் பங்குபெறும் அனைத்திலும் அரசியல் சார்ந்த கருத்துகளை கூறி ட்ரெண்டாகி வருகிறார். சமீபத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்த விஜய், அவர்களுக்கு தேவையான வாழ்க்கை கருத்துக்களோடு நடப்பு அரசியலையும் கொஞ்சம் புகட்டினார். இதனால் அவரது அரசியல் பிரவேசம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள ’நா ரெடி..’ பாடலில் கூட ”நான் ரெடிதான் வரவா..” என இவர் பாடுவதை, “அரசியலுக்கான ஹிண்டா..” என ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். முழு பாடல் வந்தால்தான் முழு கதைதெரியும். 

சினிமாவை விட்டு விலகும் லோகேஷ்? 

கிட்டத்தட்ட 6 படங்களை மட்டுமே இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தனக்கு சினிமாவில் நீண்ட நாள் இருக்கும் ஆசையெல்லாம் இல்லை என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இதில் பேசியபோது, 20 வருடங்களுக்கு சினிமாவில் இருக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் தான் வரவில்லை என்றும் எல்.சி.யூ வில் 10 படங்களை இயக்கிவிட்டு பின்பு சினிமாவை விட்டு விலக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், இவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹாலிவுட் இயக்குநர் டாரண்டினோவும் இதேபோலத்தான் 10 படங்களுக்கு மேல் இயக்க இருப்பதில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இதுவரை அவர் இயக்கியுள்ள படங்களில் ஹாலிவுட்டின் பிரபலமான நட்சத்திரங்கள் மட்டுமே நடித்துள்ளனர். இதனால், ஒரு வேலை இந்த ஹாலிவுட் இயக்குநரை பார்த்துதான் லோகேஷ் கனகராஜ் இப்படியெல்லாம் செய்கிறாரோ என ரசிகர்கள் சந்தேகித்துள்ளனர். 

மேலும் படிக்க | ‘200 ரூபாயில் ஆரம்பித்த பயணம்..’ மேடையில் உருக்கமாக பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News