விஜய் சத்யா, ஷெரின் நடித்துள்ள தில் ராஜா படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார் நடித்துள்ள தில் ராஜா படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த வாரமும் நிறைய படங்கள் வெளியாகி உள்ளது. அதில் ஒன்று தான் தில் ராஜா. A.வெங்கடேஷ் எழுதி, இயக்கி உள்ள இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் சத்யா மற்றும் கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில் கோவை பாலசுப்பிரமணியம் இந்த படத்தை தயாரித்துள்ளார். அம்ரீஷ் இசையமைக்க, மனோ V.நாராயணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க | Meiyazhagan Review : சுமாரா? சூப்பரா? மெய்யழகன் படம் எப்படி? திரை விமர்சனம்..
ஹீரோ விஜய் சத்யா தனது மனைவி ஷெரின் மற்றும் மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே தீவிர ரஜினி ரசிகரான இவர் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தில் பணி புரிந்தாலும் தனது ஆசைக்காக சொந்தமாக கார் கரேஜ் ஒன்று வைத்துள்ளார். தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஷாப்பிங் செல்கின்றனர், இரவு வீட்டிற்கு வரும் வேளையில் நான்கு இளைஞர்கள் இவர்களை வழிமறித்து போதையில் ரகளை செய்கின்றனர். அதனை தட்டிக்கேட்ட வந்த கவுன்சிலரையும் கொல்கின்றனர். அந்த 4 பேரில் அமைச்சரின் மகனும் இருக்கிறார். இவர்களுக்குள் நடக்கும் சண்டையில் அமைச்சரின் மகன் இறந்துவிட அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் தில் ராஜா படத்தின் கதை.
நடிகர் விஜய் சத்யா படம் முழுக்க இருக்கும் சண்டை காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார், அவரது ஆக்சன் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒரு சில இடங்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருந்திருக்கலாம். ஹீரோயின் ஷெரினிக்கு படத்தில் பெரிய வேலைகள் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். இமான் அண்ணாச்சி, வனிதா விஜயகுமார், விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம் ஆகியோருக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். போலீஸ் கதாபாத்திரத்தில் வருபவர்களும் நன்றாக நடித்துள்ளனர்.
தில் ராஜா படத்தை வெங்கடேஷ் எழுதி இயக்கியுள்ளார். ஒரு த்ரில்லர் படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும் இன்னும் சற்று பரபரப்பான திரைக்கதை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதேபோல மேக்கிங்கிலும் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். 1.45 மணி நேரம் மட்டுமே படம் ஓடினாலும் பெரிய படம் பார்ப்பது போல் உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள DI ஒர்க் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம், அது படம் பார்க்கும்போது ஒரு உறுத்தலாகவே இருக்கிறது. அம்ரீஷின் பின்னணி இசை காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது, பாடல்கள் இன்னும் சற்று நன்றாக இருந்திருக்கலாம்.
மனோ V.நாராயணா ஒளிப்பதிவு, சுரேஷ் அர்ஷ் எடிட்டிங், சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் ஆகியவை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும், பெரிதாக உறுத்தவில்லை. கிளைமேக்சில் வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காதபடி நன்றாக இருந்தது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி, டெக்னிக்கலாக பலமாக இருந்து இருந்தால் நல்ல ஒரு ஆக்சன் த்ரில்லராக அமைந்து இருக்கும்.
மேலும் படிக்க | ஜெயம் ரவி-ஆர்த்தி பிரிவிற்கு காரணமான பிரபல பாடகி?! யார் அவர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ