How To Be Confident Like Actor Rajinikanth : “ஸ்டைலு ஸ்டைலுதான்..நீ சூப்பர் ஸ்டைலுதான்” என்ற சினிமா பாடல், நடிகர் ரஜினிகாந்திற்கே எழுதப்பட்டது போல அவ்வளவு பொருத்தமாக இருக்கும். தனது திரை வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே இயக்குநர் “இந்த சீன்-ல இப்படி நடிக்கனும்” என்று சொன்னால், தனக்கு என்ன வருமோ, அந்த ஸ்டைலில்தான் நடிப்பாராம் ரஜினி.
இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் தனக்கு ஏற்றார் போல மாற்றிய இவர், தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், இந்திய சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்-ஆகவும் இருக்கிறார். ரஜினிகாந்தை பார்த்து, பலர் அவர் போலவே மீசை வைத்துக்கொள்ள வேண்டும், அவர் போலவே ஹேர்ஸ்டைல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவர். நீங்களும் அவர் போல ஸ்டைல் ஆக வேண்டுமா? இங்கு அதற்கான டிப்ஸை பார்க்கலாம்.
கூலான கிளாஸ்!
ரஜினிகாந்த், தனது படங்களில் எப்போதும் ஒரு கூலிங் கிளாஸ் இல்லாமல் நடிப்பதே இல்லை. படத்தில் இப்படி என்றால், நிஜத்தில் ஒரு கண்ணாடி இல்லாமல் வெளியில் வரமாட்டார். இதை கண்பார்வை குறைபாடிற்காக போட்டிருக்கிறாரா, அல்லது ஸ்டைலா என்று யாருக்கும் தெரியாது. எனவே, நீங்களும் ஸ்டைலாக உங்களை காட்டிக்கொள்ள விரும்பினால் ஒரு கூலிங் கிளாஸ் அல்லது கூலான ஃப்ரேம் வைத்த மூக்கு கண்ணாடியை போட்டுக்கொள்ளுங்கள்.
ஆடை:
ரஜினிகாந்த், எப்போதாவது கலர் சட்டை போட்டு பார்த்திருக்கிறீர்களா? தற்போதைய பட விழாக்களுக்கு அவர் வருகை புரிந்தால், அவர் உடுத்தும் ஒரே நிற உடை, கருப்பு நிற சட்டை மட்டும்தான். அதுவும் எந்த டிசைனும் அன்றி, ப்ளைனாக இருக்கும். வெளியில் சுப காரியங்களுக்கு சென்றால், அவர் உடுத்துவது வெள்ளை அல்லது தங்க நிற வேட்டி சட்டை. எனவே, நீங்களும் இது போல ப்ளைனான கலர் கொண்ட ஆடைகளை உடுத்தி பழகுங்கள். அதே பேல, ரஜினிகாந்த் தனக்கு தொளதொளவென இருக்கும் ஆடையை ஒரு போதும் அணிய மாட்டார். உடலை ரொம்பவும் இருக்காத, ஆனால் ரொம்ப லூசாகவும் இல்லாதபடியான ஆடைகளையே அணிவார்.
மேலும் படிக்க | 50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..
டெனிம் ஜாக்கெட்:
பேட்ட படத்தில், ரஜினி ஊட்டியில் ஒருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதனால், அவர் மேலே ஒரு ஜாக்கெட் ஓடு இருப்பார். இதை, குளிர் காலத்தில் மட்டும்தான் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போது உள்ளே ஒரு டீ-ஷர்ட் போட்டு, வெளியில் இதை போடலாம்.
செருப்பு:
ரஜினி தனக்கு பிடித்த கிளாசிக் ஆன லெதர் வகை ஷூக்களையே அணிகிறார். இன்னும் சில சமயங்களில், சிம்பிளான ஸ்ட்ராப் வைத்த காலணிகளை அணிகிறார்.
அணிகலன்கள்:
ரஜினிகாந்த், செயின் போட்டுக்கொண்டு, மோதிரம் அணிந்து கொண்டு செல்வதை பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால், உங்கள்க்கு தேவை என்றால் உங்கள் ஆடைக்கு ஏற்ற சிம்பிளான மோதிரமோ, செயினோ, பிரேஸ்லேட்டோ அணியலாம்.
தன்னம்பிக்கை:
வெளியில் என்ன ஆடை உடுத்தினாலும் சரி, உள்ளுக்குள் நாம் என்ன நம்மை பற்றி நினைக்குறோமோ, அதுதான் நாம். எனவே, உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு உங்கள் ஸ்டைலையும் மெருகேற்றிக்கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ